குறிக்கோளை நோக்கி நகர்கிறோம்.- அமைச்சர் மனுஷ நாணயக்கார



ரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடு எதிர்கொண்ட சவாலை எதிர்கொள்ள அனைவரும் தயங்கினர் ஆனால் , தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அச்சவாலை எதிர்கொண்டார் நாட்டு மக்களின் நலனுக்காக நாம் சிலர் ஜனாதிபதிக்கு ஆதரவு அளித்தோம் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயக்கார அவர்கள் தெரிவித்தார்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று (1) அனுராதபுர சல்காத்து விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட "இலங்கையை வெற்றி கொள்வோம்" மக்கள் நடமாடும் வேலைத்திட்டத்தின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு சிரம வாசனா நிதியத்தினால் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போது அமைச்சர் இதனைக் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்

நாம் நாட்டை இவ்வாறு முன்நோக்கி கொண்டு சென்று மக்களை வெற்றிபெறச்செய்ய விரும்புகிறோம். தாய்மார்களே

நாங்கள்; நீங்கள் எதிர்பார்ப்பதை விட சிறந்த காலத்தை பிள்ளைகளுக்கு ஏற்படுத்த உழைக்கிறோம்.நாட்டில் எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அப்போது இருந்ததை விட நாட்டில் நல்ல மாற்றம் தற்போது இருப்பதை காணலாம். எங்களுக்கு ஒரு குறிக்கோள் இருப்பதனால் பிரிந்து செல்லாது ஒன்றிணைந்து செல்ல வேண்டும் நமக்கு கட்சி நிறம் தேவையில்லை, நாட்டு மக்கள் வெற்றி பெற வேண்டியதே அவசியமாகும் .

சிரம வாசனா நிதியம் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கானது .இந்த பணத்தில் தகரங்கள், மலசக் கூடம் கடைகள் போன்றன வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக விநியோகிக்கப்பட்ட வரலாற்றை மாற்றியுள்ளோம்.

அதாவது மாற்றத்தை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டோம். இன்று இந்த நிதி உங்கள் பிள்ளைகளின் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்குகின்றோம். என்னுடைய இந்த பயணத்தில் கைகோர்த்துச் செல்ல உங்களை அழைக்கிறேன் என அமைச்சர் கூறினார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :