புலனுறுப்புகளால் மெய்சிலிர்க்க வைக்கும் சாகசம் புரிந்து சர்வதேச சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.பர்ஸான் மீண்டும் இந்தியாவின் ஆலந்தூர் நகரில் மொன்போட் மெற்றிக் உள்ளக அரங்கில் இடம்பெற்ற world karate master Association ஒழுங்கு செய்திருந்த திறந்த கராத்தே சம்பியன்சிப் போட்டியில் இரண்டாம்,மூன்றாம் இடங்களைப் பெற்று இரட்டை சாதனை புரிந்துள்ளார்.
இப்போட்டியில் இந்தியாவின் சகல மாநிலங்களில் இருந்து பிரசித்தி பெற்ற கராத்தே வீரர்கள் இப் போட்டியில் பங்கேற்றிருந்தனர்.
இதே வேளை இந்தியாவில் இதுவரை நிலைநாட்டப்படாத ஐந்து ஓடுகளை ஒரே நேரத்தில் உடைத்தல், இரண்டு கண் இமைகளாலும் 10 மி.மீ.கம்பியை வளைத்தல், இரண்டு கண் துருவங்களாலும் சங்கிலியால் பாரம் தூக்குதல், மூக்கினூடாக குளிர் பானம் அருந்துதல், பல்லினால் தேங்காய் உரித்தல், மூக்கினால் வயரை விட்டு அதனை வாய் வழியாக எடுத்து மின் குமிழை எரியச் செய்தல், மூக்கினூடக 4 அங்குல கத்தரிக்கோலை செலுத்துதல், பல்லில் வைத்து 10 மி.மீ.கம்பிகள் இரண்டை வளைத்தல், வயிற்றில் பாரமான கற்களை வைத்து சுத்தியலால் உடைத்தல் , உடம்பு பாகங்களினால் ஓடுகளை உடைத்தல் , மரப்பலகையில் கையினால் ஆணிகளை அடித்து ஏற்றுதல் , மரப்பலகைகளை கைகளினால் உடைத்தல் , மரப்பலகைகளை கையினால் உடைத்தல், நாணய குற்றிகளை இரு கண்களுக்குள்ளும் வைத்து மறைத்தல், பல்லினால் 15 கிலோ கிராம் எடையை தூக்குதல், பெப்ஸி குளிர்பான அலுமினிய டின்களை கையால் உடைத்தல் போன்ற 16 சாதனைகளை தஞ்சாவூரிலுள்ள பாரத் விஞ்ஞான முகாமைத்துவ கல்வியல் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர் மத்தியில் நிகழ்த்திக்காட்டி மீண்டும் உலக சாதனைக்காக சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் தடம்பதித்து இலங்கைக்கும் தான் பிறந்த சாய்ந்தமருது மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
சோழன் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் நீலமேகம் நிமலன் இவரின் செயற்பாடுகளை உலக சாதனைக்காக ஏற்றுக் கொண்டு சான்றிதழையும்,பதக்கங்களையும் வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வுகளில் கிழக்கு மாகாண கராத்தே தோ சம்மேளனத்தின் தலைவரும்,தென்கிழக்கு பல்கலைக்கழக கராத்தே போதனாசிரியருமான முஹம்மத் இக்பால் கலந்து கொண்டிருந்தமை சிறப்பம்சமாகும்.
0 comments :
Post a Comment