இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பாடசாலையில் உள்ள குறைநிறைகளை பாடசாலை நிர்வாகத்திடம் ஆராய்ந்ததுடன், மாணவர்களிடம் கல்வி மேம்பாட்டு விடயங்கள் தொடர்பில் உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம், கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜௌபர், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினரின் பொதுஜன தொடர்பாடல் செயலாளருமான யூ.எல்.என். ஹுதா உமர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நற்பிட்டிமுனை அமைப்பாளரும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான யூ.எல். தௌபீக், பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்க பிரதிநிதிகள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
ஊடகப்பிரிவு
0 comments :
Post a Comment