கொட்டும் மழையிலும் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் சுதந்திர தினம் அனுஷ்டிப்பு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
லங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76 ஆவது சுதந்திர தினம் நேற்று (04) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் கொண்டாடப்பட்டது.

கொட்டும் மழையென்றும் பாராது சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் மரைக்காயர்மார்கள் புடைசூழ தேசிய கொடி ஏற்றப்பட்டது.

அத்துடன் சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளிவாசல் வளாகத்தில்
மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தலைவர் ஏ.ஹிபத்துல் கரீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.எம். சம்சுதீன், சாய்ந்தமருது பிரதேச செயலக முஸ்லிம் கலாசார உத்தியோகத்தர் ஏ.எம். பர்ஹான், ஜும்ஆப் பள்ளிவாசலின் செயலாளர் ஐ.எல்.எம்.மன்சூர், பொருளாளர் ஏ.ஏ.சலீம் உட்பட கௌரவ மரைக்காயர்மார்கள் உட்பட அதன் நிர்வாக உத்தியோகத்தர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் பேஸ் இமாம் எம்.ஐ. ஆதம்பாவா ரஷாதியினால் நாட்டின் சுபீட்சத்துக்காக துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :