நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஓட்டமாவடி கிளையின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்; ஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆப் பள்ளில் இடம் பெற்றது.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஓட்டமாவடி கிளையின் அஷ்ஷெய்க் எஸ்.ஐ.றம்ளான் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்தியர் டாக்டர் எஸ்.ஐ.மர்சூக் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்.
இதன் போது பிரதேசத்தை சேர்ந்த ஆண் பெண் இருபாலாரும் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஓட்டமாவடி கிளை வருடா வருடம் இரத்ததான முகாமை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment