தேசிய மக்கள் சக்திக்கு பேஸ்புக் அலை மட்டுமே..- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க



Ø தேசிய மக்கள் சக்திக்கு பேஸ்புக் அலை மட்டுமே...

Ø நாட்டின் ஆட்சி அதிகாரத்தை ஜே.வி.பிக்கு வழங்கும் அளவுக்கு மக்கள் முட்டாள்கள் அல்ல...

Ø ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும்...


தேசிய மக்கள் சக்திக்கு பேஸ்புக் அலை மட்டுமே உள்ளது என்றும் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை ஜே.வி.பிக்கு வழங்கும் அளவுக்கு இந்த நாட்டு மக்கள் முட்டாள்கள் இல்லை என வும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் போது அதனை ஒரேயடியாக செய்ய முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (15) மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளும் பதில்களும் வருமாறு.

கேள்வி –பொஹொட்டுவவின் கருத்தையா நீங்கள் நேற்று அறிவித்தீர்கள்?

பதில் - பொஹொட்டுவவின் கருத்தை அல்ல எனது கருத்தை சொன்னேன். இன்றும் அதே நிலையில்தான் இருக்கிறேன்.

கேள்வி - உங்கள் கருத்து என்ன?

பதில் - கடந்த 3 வருடங்கள் நாங்கள் மிகவும் கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டோம். கோத்தபாய அவர்கள் வந்து இந்த நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்ற பெரும் தியாகம் செய்தார். அதனால் அவர் பதவி இழந்தார். ஒரு கட்சியாக நாட்டைப் பற்றி சிந்தித்து ஜனாதிபதி பதவி விலகினார், பிரதமர் பதவி விலகினார், அமைச்சரவையில் இருந்து நாங்களும் விலகினோம். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கக்கூடிய ஒருவரை வந்து பொறுப்பேற்க அழைத்தோம். நிபந்தனையின்றி நாங்கள் உதவுவோம் என்று கூறினோம். ஆனால் அப்போது யாரும் முன்வரவில்லை. நாடு மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அப்போதுதான் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வந்து நாட்டைப் பொறுப்பேற்றார். தேசத்தைக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு இழுத்தடிக்காமல் உதவுங்கள் என்றார். அதனால்தான் கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் சில ஆணைகள் தயக்கத்துடன் நிறைவேற்றப்பட்டன. அந்த முடிவுகள் நாட்டின் எதிர்காலத்திற்காக எடுக்கப்பட்டவை. நாங்கள் எதுக்கும் இடைஞ்சலாக இருக்கவில்லை. அவருக்கு உதவினோம். இன்று திரும்பிப் பார்க்கும்போது, நாடு முந்தைய நிலையில் இருந்து உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 3,000 ரூபாய்க்கு வாங்கப்பட்ட காலம் இருந்தது என்பதை ஊடகவியலாளர்களாகிய நீங்கள் அறிவீர்கள். அத்தியாவசியப் பொருட்கள் இல்லாத காலம் ஒன்று இருந்தது. இப்போது நாடு மெல்ல மெல்ல பொருளாதார ரீதியாக நிலையான நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. எனவே, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கக்கூடிய ஒரு தலைவரே இந்த நேரத்தில் நாட்டுக்கு தேவை என்று நான் நினைக்கிறேன். எனவேதான் திரு.ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தேன்.

கேள்வி - கட்சியின் கருத்து மாறினால் எந்த பக்கம் நிற்பீர்கள்?

பதில் - ஒரு நபரின் அடிப்படையில் கட்சி தனது கருத்தை மாற்ற வேண்டும். அந்த நபரைப் பொறுத்து, அந்த நேரத்தில் என் கருத்து மாறும்.

கேள்வி - ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலுக்கு வருவேன் என்று இதுவரை கூறவில்லை அல்லவா?

பதில் - அவர் கேட்டால் நாங்கள் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறேன் என்றுதான் கூறினேன்.

கேள்வி – Njrpa மக்கள் சக்தி முன்னுக்கு வருவதாக கிராமங்களில் பேசப்படுகிறது?

பதில் - 5% வாக்கு சதவீதம் பெற்ற ஒருவர் 50 இலட்சம் பெற்றால், அவர் வாக்காளர் எண்ணிக்கையை 1000% அதிகரிக்க வேண்டும். அப்படி வளர்ந்த கட்சி இந்த அரசியல் வரலாற்றில் இல்லை. புதிய தலைமுறைக்கு தெரியாவிட்டாலும், தேசிய மக்கள் சக்தி எப்படி செயல்பட்டது என்பதை படித்த அறிவாளிகளுக்கு தெரியும். கட்சியின் பெயர் திசைகாட்டி என மாற்றப்பட்டது. கட்சியை திசைகாட்டி என்று மாற்றியது ஏன்? தேசிய மக்கள் சக்தியும் திசைகாட்டியும் ஒன்று. இரண்டல்ல. 88 - 89, 77 கிளர்ச்சியின் போது மக்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள், அதிபர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள், இராணுவ அதிகாரிகளின் குடும்பங்கள் வெளியே கொல்லப்பட்டனர் திசைகாட்டி மற்றும் விடுதலைப் புலிகளுக்கும் வேறுபாடு இல்லை. அப்படியானால், விடுதலைப் புலிகளும் இணைந்து எதிர்காலத்தில் நாட்டை ஆளும் அதிகாரத்தை வழங்குகிறார்கள். இவ்வாறானவர்கள் ஜே.வி.பிக்கு கொடுக்கும் அளவுக்கு முட்டாள்கள் அல்ல. ஃபேஸ்புக் அலையில் எதையாவது செய்ய முயற்சிக்கிறார்கள். அது பரவாயில்லை. அவர் இந்தியாவுக்குச் சென்று அந்த உறவுகளை உருவாக்கினார். 83 கறுப்பு ஜூலையை உருவாக்கியது ஜேவிபி. அப்போதும் எத்தனை ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள்? ஆனால் இன்று ஒரு அடி பின்வாங்கி அரசியல் முதிர்ச்சியின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவது பெரிய விஷயம். ஆனால் அந்த நபர்களுக்கு இது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. கடந்த மே 9ஆம் திகதி வீடுகளுக்கு தீ வைத்து கொலைகள் நடந்தன. இது அவர்களின் மரபணுக்களில் உள்ள ஒன்று. நீங்கள் சொல்வது போல் இந்த நாட்டில் உள்ள அறிவாளிகள் மாற மாட்டார்கள்.

கேள்வி - ஜனாதிபதி முறைமை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில் - இன்று ஜனாதிபதி முறைமை பற்றி ஒரு கருத்து உள்ளது. ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என நான் நம்புகிறேன். ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதன் மூலம் அதனை திடீரென மாற்ற முடியாது. அப்படியானால், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் முறை, நிர்வாக அதிகாரம் எவ்வாறு பரவலாக்கப்படுகிறது, அரசியலமைப்பு ரீதியாக அந்த விவகாரங்கள் மாற்றப்பட வேண்டும். தினமும் சிறு சிறு திருத்தங்களால் ஏற்படும் நம் நாட்டில் நடந்த பிரச்சினை இது. போராட்டத்தின் போது மக்கள் அமைப்பு மாற்றத்தை ஏன் கோரினார்கள்? அமைப்பு மாற்றம் என்பது அரசியல்வாதிகளின் தவறுகள் மட்டுமல்ல. இதைத்தான் திரு.ரணில் விக்கிரமசிங்க இன்று செய்கிறார். பொருளாதார நெருக்கடியை தீர்க்கும், முறைமையை மாற்றக்கூடிய ஒரு தலைவராக நான் திரு ரணில் விக்கிரமசிங்கவை மட்டுமே பார்க்கிறேன் என்று கூறுகிறேன்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :