ஜனாதிபதி கதிரையிலிருந்து ரணில் விக்ரமசிங்க அவர்களை எவராலும் நீக்க முடியாது. -அமைச்சர் மனுஷ நாணயக்கார



நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மற்றும் வரையில் அவர் தனது பயணத்தை நிறுத்த மாட்டார் என்பதை நான் நம்பிக்கையுடன் கூறுகிறேன்.

இந்த நாட்டை சிங்கப்பபூரை விட அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயக்கார அவர்கள் அனுராதபுர இளைஞர் மன்ற கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சி மாநாட்டில் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்

நாம் அனைவரும் ஒன்றிணைந்து இன்னும் சில காலம் நாட்டின் தேசியத் தலைவராக அவரை ஜனாதிபதி பதவியில் அமர்த்த வேண்டும்.

தற்போது திருடர்களை கைது செய்வதற்கு முன் அதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை அமைத்து பல வருடங்களாக அழிந்து போன நாட்டை சீர்செய்யும் பணியை ஆரம்பித்துள்ளார்.

2018ல் நாடு இருந்த நிலையிலிருந்து 2024க்குள் எங்களால் மாற்றத்தை கொண்டு வர முடிந்துள்ளது. எனவே 2048ல் முழு நாட்டையும் வெற்றி பெற்ற நாடாக மாற்றப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

இன்றைய தொழிலதிபர்கள் ஏதோஒரு வழியில் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், சாதாரண மக்களும் உழைப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறுகின்றனர். அவர்கள் மின்சாரம், எரிபொருள் இல்லாதொரு யுகத்துக்கு மீண்டும் செல்ல தயாரில்லை.

நாட்டை நேசிக்காதவர்கள் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்க பார்க்கிறார்கள். அவரை தோற்கடிப்பது இந்த நாட்டை தோற்கடிப்பதற்கு சமனாகும். இது நாட்டைக் காப்பாற்றக் கூடிய நேரமல்ல. மக்களைக் காப்பாற்ற கிடைத்த இறுதி சந்தர்ப்பம் .

ரணில் விக்கிரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாக நீடித்தால்தான் மக்களைக் காப்பாற்ற முடியும் . இலங்கையை வெற்றி பெற செய்வதற்கு இதுவே கடைசி வாய்ப்பு.
இந்த நாட்டின் எழுச்சியைக்காண அனைவரையும் கை கோர்க்கும் படி அழைப்பு விடுக்கிறேன் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :