யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் திருக்கோயில் பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு ஐந்து மாதக் காலத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு ,வீடுகள் இன்றி இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்த நிலையில், இவ்விடயம் தொடர்பாக அம்பாறை மாவட்ட அரச அதிபர்,திருக்கோவில் பிரதேச செயலாளர், அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்களால் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
ஆளுநர் செந்தில் தொண்டமான் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு, மக்களின் குறைகளை கேட்டறிந்து மக்களின் கோரிக்கையை ஏற்று ஐந்து மாதக் காலத்திற்குள் அவர்களுக்கான வீடுகளை நிர்மாணித்து அம்மக்களிடம் கையளித்துள்ளார்.
திருக்கோயில் மாவட்ட மக்கள் தங்களது கோரிக்கையை குறுகிய காலத்தில் நிறைவேற்றியமைக்காக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திருக்கோவில் பிரதேச செயலாளருக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment