சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக பண உதவி கோரல்



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
சாய்ந்தமருது -13, 183/1ஐச் சேர்ந்த ஆதம்பாவா சித்தி சிஹானா (845134553v) என்பவர் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவருக்கு 4 வயதுடைய பெண் குழந்தையும் மற்றும் கல்வி கற்கக்கூடிய 12 வயதுடைய பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந் நோய் நிலைமை காரணமாக இக்குழந்தைகளை பராமரிப்பதில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றார்.
ஆகவே, இவருக்கு அவசரமாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்யுமாறும் அதற்காக 80 இலட்சம் ரூபா பணம் தேவைப்படும் எனவும் அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இவருடைய குடும்பம் போதிய வருமானமின்மையால் இத்தொகையை இவரது குடும்பத்தினரால் முழுமையாக ஈடு செய்ய முடியாத நிலையில் தற்போது தனவந்தராகள், பரோபகாரிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து முடிந்த அளவு பண உதவியை எதிர்பார்க்கிறார்.

இந்நோய் நிலைமையினை உண்மை என உறுதிப்படுத்திக் கொள்வதற்கு 0768848415, 0752136492 என்ற
தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொண்டோ அல்லது மேலே உள்ள முகவரிக்கு நேரடியாக வந்து இவரைப் பார்வையிடுவதன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

உதவ விரும்புவோர், A. Sithy Sihana, கணக்கிலக்கம் 338200360006399, மக்கள் வங்கி, சாய்ந்தமருது என்ற வங்கி இலக்கத்துக்கு தங்களது உதவியை வழங்கி வைக்கலாம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :