குறித்த நிகழ்வின்போது பழைய மாணவர்கள் சார்பில் பேராசிரியர் கலாநிதி எம்.ஏ.சி. சல்பியா உம்மா அவர்கள் கவிதை ஒன்றை வாசித்து அவரிடம் ஒப்படைத்தார்.
வாசிக்கப்பட்ட கவிதை வரிகள்.....
கல்வி செம்மல் ஒன்று இன்று ஓய்வு பெறுகிறது.
நிந்தவூர் மண் ஈன்றெடுத்த
நல்ல பல பண்புகளை பட்டியல் படுத்தி நிற்கும்
பரம்பரை ஒன்றில் ஆதம்பாவா விஸ்வாஉம்மா
தம்பதிகளுக்கு மூத்த மகனாய் அவதரித்த ஆதம்பாவா ஜமால்டீன் சார் எனும்
கல்விச் செம்மல் ஒன்று இன்று ஓய்வு பெறுகிறது.
தன் ஆரம்பக்கல்வியை இமாம் றூமி வித்தியாலயத்திலும் இடைநிலைக்கல்வியை அல் அஸ்ரக் தேசிய பாடசாலையிலும் செவ்வனே கற்று
உயர்தரமும் ஒழுங்கு சேர கல்முனை சாஹிறாக் கல்லூரியில் வர்த்தகப் பிரிவில் கற்று
முத்துக்களில் முத்தாய் வணிகமாணி பட்டத்தினை
யாழ் பல்கலைக்கழகத்தில் கற்று
உமது ஊருக்கே பெருமை சேர்த்தீர் அன்று
திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவது போல
கடல் தாண்டி கற்றுக் கொண்டீர் கேரளாப் பல்கலையின்
முதுமாணிப் பட்டத்தினை
1996இல் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில்
விரிவுரையாளர் பதவி ஒன்று உமை வந்து அலங்கரிக்க
அன்று முதல் முழுமூச்சாய்
ஆசானாய்
பகுதி தலைவராய்
தொழில் வழிகாட்டல் பிரிவின் தந்தையாய், மாணவ ஆலோசகராய்
பதவிகள் பல புரிந்து
சக விரிவுரையாளர்களுக்கு எல்லாம் தோழனாய் இருந்து
அரும் பணிகள் பல புரிந்தீர்
அன்பான துணைவியாக
அன்பான துணைவியாக சித்தி பதீலாவை 1992இல் கரம் பிடித்து இனிமையான இல்லற பயணத்தில் இணைந்து கொண்டனர். ஜம்சித் ஹஸன், ஜம்சீனா, ஜுமானியா, ஜுமானா, ஜாமி ஹசன்
ஆகிய ஐந்து முத்துக்கள்
அத்தனையும் அறிவு பொக்கிஷங்கள்
27 வருட சேவை பயணத்தில் நனைந்து கொண்டது
இத் தென்கிழக்கு பல்கலயின் வர்த்தக முகாமைத்துவ பீடம்
கம்பீரமான பேச்சும், கடமை உணர்வும் ,நேர முகாமைத்துவமும் , நட் துணிவும், நேர் மனப்பக்குவமும், நயமுடன் பாராட்டும் தயாள குணமும்
நீர் கொண்ட இலட்சணங்கள்
ஒரு மாணவனாய் தினமும் உமது கம்பீர குரல் கேட்க
விரிவுரை மண்டபத்தில் காத்திருந்த காலங்களும்
கற்று அறிந்த பாடங்களும் ஏராளம்
எம் நெஞ்சங்களில் நிறைந்த ஜமால்டீன் சார் எனும் இந்த ஆளுமைச் செம்மல்
எம்மை விட்டு நீங்கி செல்லும் தருணம்
கனத்த இதயத்தோடு சோகம் சுடர் விட
நிர்ப்பந்தம் எம்மை நெருங்கிட
விழி நீர் துளிகளோடு வழி அனுப்புகிறோம்
வயதினால் இன்று நீர் ஓய்வு பெற்றாலும்
மனதினால் என்றும் நீர் ஓர் இளைஞனே
செல்வங்கள் பல பெற்று
பேரர்கள் பல புடை சூழ
ஆரோக்கியமாய் நிறை வாழ்வு வாழ்ந்திட
எம் வர்த்தக முகாமைத்துவ குடும்ப பிரார்த்தனைகள்
என்றென்றும் உமக்காய் நிறைந்திருக்கும் எம் உள்ளங்களில்...
வரிகள் : பேராசிரியர் எம்.ஏ.சி. சல்பியா.
பழைய மாணவர்கள் சார்பாக
0 comments :
Post a Comment