கல்முனை KDMC நெனசல, கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் உயர் கல்வி வழிகாட்டல் மற்றும் திறன் மேம்படுத்தல் சம்பந்தமான செயலமர்வு நெனசல கல்வி நிறுவன மண்டபத்தில் (3 ) அண்மையில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் வளவாளராக என்.ரீ.சி லங்கா கெம்பஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரியும் விரிவுரையாளருமான எம்.வை.எம்.வை. இம்றான் கலந்து கொண்டு இளைஞர் யுவதிகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் மற்றும் எதிர்கால கல்வி மற்றும் தொழில நுட்பங்கள் பற்றி விரிவுரையாற்றினார்.
மேலும் KDMC நெனசல கல்முனை கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.எம். ஹாஜா, கல்வியின் தற்போதைய நிலை, தொழில் வழிகாட்டல், எதிர்கால இளைஞர்களின் சிந்தனை, தனியார் கல்வியின் அனுகூலம் என பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
இச் செயலமர்வில் நிறுவத்தின் உயர்அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டார்கள்.
இந் நிகழ்வின் இறுதியில் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment