புத்தளம் முதளைப்பாழி அல் மினா மும்மொழி பாலர் பாடசாலையின் விடுகை விழா (23) முதளைப்பாழி முஸ்லிம் மகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர் இஸட்.ஏ.தௌபீக் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
இவ்விழாவில், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.ரி.எம்.தாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான பைசல் மரைக்கார், றிபாஸ் நசீர், மௌலவி பஸால் சலபி, கவிக்குரல் மன்சூர், கவிஞர் முனவ்பர்கான் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment