ரிதம் சனசமூக நிலையம் மற்றும் ரிதம் இளைஞர் கழகம் என்பவற்றின் ஏற்பாட்டில் ரிதத்தின் 20 ஆண்டு நிறைவையொட்டி ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இரத்ததான முகாம் ரிதம் சனசமூக நிலைய கட்டிடத்தில்(25) இடம்பெற்றது.
ரிதம் சனசமூக நிலையத்தின் தலைவர் கே.ஈ.கருணாகரன் மற்றும் ரிதம் இளைஞர் கழகத் தலைவர் எஸ்.சஜிந் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி இரத்ததான முகாமிற்கு ஆனைப்பந்தி ஸ்ரீசித்திவிநாயகர் ஆலையம் மற்றும் ரிதம் சனசமூக நிலையம் என்பன அனுசரணை வழங்கியிருந்தன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேற்படி இரத்ததான முகாமில் வைத்தியர்கள், தாதி உத்தியோஸ்தர்களும், ரிதம் குழுவினரும், குருதிக் கொடையாளிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment