இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் சர்வதேச ஆய்வு மாநாட்டுக்கு ஆய்வுக் கட்டுரைகள் கோரப்படுகின்றன!



லங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பத்தாவது சர்வதேச ஆய்வு மாநாடானது BCAS Campus மற்றும் அமானா வங்கி ஆகியவற்றின் இணை அனுசரணையுடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முப்பதாம் திகதி (30.04.2024) செவ்வாய்க்கிழமை நடைபெற ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதியும், பத்தாவது சர்வதேச ஆய்வு மாநாட்டின் தலைவருமான அஷ்ஷெய்க் எம்.எச்.ஏ. முனாஸ் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார்.

முக்கியமாக இந்த ஆய்வு மாநாட்டின் பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளதோடு, பிரதம பேச்சாளராக கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதியும், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினருமான சிரேஷ்ட பேராசிரியர் D. A. பிரேம்குமார டி சில்வா அவர்களும், கௌரவ அதிதியாக சவூதி அரேபியாவில் இருந்து Imam Mohammad Ibn Saud Islamic University, Riyadh இன் Modern and Contemporary Saudi History in the Faculty of Social Sciences பேராசிரியர் Saad bin Saeed Aaidh Al-Qarni அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.

குறித்த பத்தாவது ஆய்வு மாநாடானது “எண்ணிம யுகத்தில் நிலைபேறான அபிவிருத்திக்கு இஸ்லாமிய மற்றும் அரபு மொழிக் கல்வியின் முக்கியத்துவம்” (Arabic and Islamic Education towards Sustainable Development in the Digital Era) எனும் பிரதான கருப்பொருளில் இடம்பெறவுள்ளது என்பதோடு மேற்படி ஆய்வு மாநாட்டுக்காக பின்வரும் உப பிரிவுகளில் ஆய்வுக் கட்டுரைகள் கோரப்படுகின்றன. இவற்றுக்கு மேலதிகமாக ஆய்வு மாநாட்டின் பிரதான கருப்பொருளை தழுவி நிற்கும் ஆய்வுக்கட்டுரைகளையும் ஆய்வாளர்கள் சமர்ப்பிக்க முடியும்.

• Globalization and Islamic Education

• Technological Learning Platforms

• Comprehensive understanding of Islam and its values

• Integration of Sustainable Development and Islamic Education

• Cultivating Global Citizenship through Arabic and Islamic Education

• Teacher Professional Development in the Digital Era

• Policy, Governance, and Regulation in Arabic and Islamic Education

• Digital Transformation

• Interdisciplinary Studies in the Digital Era

• Contemporary Issues in Sustainable Development in the Digital Era


ஆய்வுக்கட்டுரைகளை தமிழ், அரபு, ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் எதிர்வரும் 15.03.2024 ஆம் திகதிக்கு முன்னர் intsymfia2024@seu.ac.lk எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாக சமர்ப்பிக்கலாம் என்பதோடு ஆய்வு மாநாடு தொடர்பான முழுமையான விபரங்களை https://www.seu.ac.lk/fia/intsymfia2024/ எனும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

ஆய்வு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டு, சிறந்த ஆய்வுக்கட்டுரைகளாக இனங்காணப்படும் கட்டுரைகள் சர்வதேச ஆய்வு சஞ்சிகைகளிலும் பிரசுரமாகும் என்பதோடு ஏனைய ஆய்வுக்கட்டுரைகள் பல்கலைக்கழக நூலகத்தின் E-Repository (Google Scholar Indexed) யில் பிரசுரிக்கப்படும்.

மேலதிக விபரங்கள் தேவையானோர் பத்தாவது ஆய்வு மாநாட்டின் இணைப்பாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எப். எச். ஏ. ஷிப்லி (0772301539) அல்லது செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ். ஐ. நிம்சித் (077422662) ஆகியோரை தொடர்பு கொள்ள முடியும்.


தகவல் :-
பத்தாவது சர்வதேச ஆய்வு மாநாட்டுக்குழு
இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடம்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்




ஊடக பிரிவு
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :