மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை நிவர்த்திப்பதற்காக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்கள் அட்டாளைச்சேனைக்கு வருகை தந்து சிறப்பித்தார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்கள் பிரதேச முக்கியஸ்தர்கள் மற்றும் இளைஞர்களினால் அழைத்து வரப்பட்டதுடன் இதுவரை காலமும் அபிவிருத்தி செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வரும் பாதைகளையும் அவருக்கு நேரில் காண்பித்ததுடன் ஆளுநரிடம் சமர்ப்பிப்பதற்கான மகஜர் ஒன்றினையும் பொது மக்களினால் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இப்பிரதேச மக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும், மேலதிக நடவடிக்கைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநரிடம் கலந்துரையாடவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்கள் இங்கு உரையாற்றும் போது கருத்துத் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment