தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் கல்லாற்று பிராந்திய நிலைய பொறுப்பதிகாரி விஜயரெத்தினம் விஜயசாந்தனுக்கு சேவை நலன் பாராட்டு விழா நடைபெற்றது.
கல்லாறு நிலைய பொறுப்பதிகாரி பொறியியல் உதவியாளர் விஜயரெத்தினம் விஜயசாந்தன் கல்லாறு பணிமனையில் இருந்து காரைதீவு பணிமனைக்கு இடமாற்றம் பெற்றதையடுத்து இச் சேவைநலன் பாராட்டு விழா நேற்று முன்தினம் (15) வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த வேளையில் கல்லாறு தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் கல்லாறு நிலைய அலுவலக உத்தியோகத்தர்களினால் விஜயசாந்தனுக்கு சேவை நலம் பாராட்டு விழா சிறப்பாக இடம்பெற்றது.
மேலும் இடமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களுக்கு ம் சேவைநலன் பாராட்டு விழா நடைபெற்றது.
அவ்வமயம் முன்னாள் ஓய்வு நிலை நிலையப்பொறுப்பதிகாரி பொறியியல் உதவியாளர் ஏகாம்பரம் அருள்பிரகாசமும் கலந்து சிறப்பித்தார்.
0 comments :
Post a Comment