பேருவளை, ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் ஐம்பதாண்டு நிறைவை யொட்டிய பொன்விழா நிகழ்ச்சியின் மற்றுமொரு தொடரின் வரலாற்று நிகழ்வு எதிர்வரும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 2.45 மணிக்கு ஜாமிஆ நளீமிய்யா கலாபீட மாநாட்டு மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜாமிஆ நளீமிய்யா கலாபீட நிர்வாக சபையும் ராபிததுந் நளீமிய்யீன் பேருவளை வலயமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஜ் மர்ஜான் பளீல் கலந்து சிறப்பிக்கிறார்.
விசேட அதிதியாக நளீமிய்யா பரிபாலன சபைத்தலைவர் யாகூத் நளீம் மற்றும் கௌரவ அதிதியாக கலாபீட முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) ஆகியோரும் கலந்து சிறப்பிப்பர்.
இவ்விழா நிகழ்வில் நளீமிய்யா உருவாக்கத்திற்கு நளீம் ஹாஜியாருடன் இணைந்து உழைத்த ஸ்தாபகர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு, நளீமிய்யாவின் ஐம்ப தாண்டு நிறைவையொட் டிய நினைவு முத்திரை வெளியீடு, 'ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம்: எண்ணக்கருவும் தோற்றமும்' என்ற வரலாற்று நூல் வெளியீடு மற்றும் நளீமிய்யா கலாபீடத்திற்கான 'SOLAR POWER PROJECT' சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டமும் இந்நிகழ்வின்போது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளமையும் விசேட அம்சமாகும்.
0 comments :
Post a Comment