சைவத் தமிழ் மன்றத்தின் அகில இலங்கை சைவ பண்டிதர் சபையானது 2023 ஆண்டில் நடாத்திய சைவ பண்டிதர், இளஞ்சைவ பண்டிதர் தேர்வுகளில் சித்தி பெற்றவர்களுக்கான பட்டமளிப்பு விழா இன்று 03-02-2024 ஆந்திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணி தொடக்கம் நடைபெற உள்ளது.
சைவத்தமிழ் மன்றத்தின் தலைவர் சைவப்புலவர் சைவப்பண்டிதர் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவத்துறை பீடாதிபதி சைவப் புலவர் சைவப் பண்டிதர் பேராசிரியர் தி.சதானந்தன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் முன்னிலை அதிதிகளாக கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா.செல்வராஜா மற்றும் கிழக்குப் பல்கலைக் கழக கலை கலாசார பீட பீடாதிபதி கலாநிதி வ.குணபாலசிங்கம் ஆகியோரும் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கி.குணநாயகமும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
இம்முறை ஒரு சைவப் பண்டிதரும், பதினெட்டு இளஞ்சைவ பண்டிதர்களும் பட்டம் பெறத் தகுதி பெற்றுள்ளனர் என்று சைவத் தமிழ் மன்ற பொது செயலாளர் சைவபண்டிதர், சைவப்புலவர் செ.சாந்தரூபன் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment