மருதமுனை மனாரியன் 88 அமைப்பின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் "மருதமுனை இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கு உதவுவோம்" எனும் செயற் திட்டத்தின் கீழ் அல்-ஹாஜ் கலீல் முஸ்தபா அவர்களினால் மருதமுனையிலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்ற நிகழ்வு மனாரியன் 88 அமைப்பினரால் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும் மருதமுனையில் காணப்படுகின்ற சுமார் 33 இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கும் வருடாந்தம் உதவிகளை தொடர்ந்து வழங்கும் இந்த செயற்திட்த்தின் கீழ் இதுவரைக்கும் 12 கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.
இந்த குறிப்பிட்ட செயற்திட்டம் தொடர்பாக மருதமுனை " விறைட் பியூச்சர் " Bright Future Cricket Club விளையாட்டு கழகம் மற்றும் பர்வின் ரெடிங் , லதான் அக்ரோ இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்களின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அல்-ஹாஜ் கலீல் முஸ்தபா அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு மருதமுனை பிரதான வீதி முஸ்தபா கட்டிட தொகுதியில் 20.02.2024 இடம் பெற்றது.
இந் நிகழ்வில் மருதமுனை "விறைட் பியூச்சர்" " விளையாட்டு கழகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் சவால்கள் மற்றும் கழக கட்டமைப்பு, முன்னேற்றம் மற்றும் எதிர்கால உதவிகள் என்பன போன்ற விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதுடன்,
விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment