காலஞ் சென்ற முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், ,கூட்டுறவுத்துறை அமைச்சருமான நஜீப் அப்துல் மஜீத் அவர்களுக்கான துஆப் பிரார்த்தனையும் நினைவுரையும் கிண்ணியா புஹாரி பள்ளிவாசல் மண்டபத்தில் ( 17) நடை பெற்றது.
இந் நிகழ்வை கிண்ணியா நத்வதுல் புஹாரி அரபுக் கல்லூரி நிர்வாகம் சபை மற்றும் மர்ஹும் நஜீப் அப்துல் மஜீதின் ஏற்பாட்டுக் குழுவினால் நடத்தப் பட்டது.40வது நாளன்று அன்னாருக்கு கத்தமுல் குர்ஆன் அரபுக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்களினால் ஓதப் பட்டது.மர்ஹும் நஜீப் அப்துல் மஜீதின் நினைவுரைகளை கிண்ணியா நத்வதுல் புஹாரி அரபுக் கல்லூரியின் தலைவரும் விரிவுரையாளருமான எஸ்.எம்.முஜித் மற்றும் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் முன்னாள் அமைச்சரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர் உரையாற்றினர்.இதனையடுத்து அன்னாருக்கு துஆப் பிரார்த்தனை இடம் பெற்றது. நத்வதுல் புஹாரி அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் எம்.எச்.எம்.பசீர் துஆப் பிரார்த்தனை செய்தார்.
இலங்கை துறைமுக அதிகார சபையின் ஓய்வு நிலை பொறியியலாளர் எம்.எஸ்.எம்.பௌஸி,கத்தமுல் குர்ஆன் பிரதிகளை நத்வதுல் புஹாரி அரபுக் கல்லூரியின் அதிபர் எஸ்.எம். முனீர் மற்றும் முன்னாள் அமைச்சரும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லா ஆகியோருக்கு வழங்கி வைத்தார்
இந்நிகழ்வில் முன்னாள் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.குத்தூஸ், கிண்ணியா சுகாதார வைத்தியதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி ,அதிபர்கள்,ஆசிரியர்கள், துறைசார்ந்த பதவி நிலை உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள்,அரபுக்கல்லூரி விரிவுரையாளர்கள்,கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கது.
0 comments :
Post a Comment