சாய்ந்தமருது வொலிவேரியன் கிராம அபிவிருத்தி குழுவின் கூட்டம் பல்தேவை கட்டிடத் தொகுதியில் கடந்த புதன் கிழமை (14) இடம்பெற்றது.
பொலிவேரியன் கிராமத்தில் இருக்கின்ற அனைத்து சங்கங்கள் அமைப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பொதுவான அமைப்பின் நெறிப்படுத்தலின் கீழ், சாய்ந்தமருது பொலிஸ் மக்கள் பாதுகாப்பு பிரிவின் வழிகாட்டலின், கிராம போதை ஒழிப்பு குழு, எம் எஸ் காரியப்பர் வித்யாலய பாடசாலை அபிவிருத்திக் குழு , மஸ்ஜிதுல் ஹிஜ்ரா பள்ளிவாசல் பரிபாலன சபை ஆகியவற்றின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உதவி பொலிஸ் அத்தியட்சகர்சகர் ஏ .எல். எம்.றவூப் , கிராம சேவை அதிகாரி எம் எம் மாஹிர் , சமுர்த்தி உத்தியோகத்தர் எம் ஐ எம் ஜாபீர் , கிராம மக்கள் பாதுகாப்பு பொறுப்பு அதிகாரி மக்புல் , பாடசாலை அதிபர் எம் எஸ் ஆரிப் , பதினாறாம் பிரிவினுடைய பொலிஸ் அதிகாரி திலீபன் , சமூக நலன் கொண்டவர்கள் , அமைப்புக்கள் சங்கங்களினுடைய தலைவர் செயலாளர் பொருளாளர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment