பெத்தகான ஈரநிலப் பூங்கா மற்றும் கோட்டே ரம்பர்ட் ஈரநிலப் பூங்கா ஆகியவை டில்மா சிலோன் தேயிலை நிறுவனத்தால் ஒரு வருடத்திற்கு அனுசரணை வழங்கப்படுகின்றன.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் மற்றும் டில்மா சிலோன் தேயிலை நிறுவனத்தின் தலைவர் தில்ஹான் பெர்னாண்டோ ஆகியோரின் தலைமையில் பத்தரமுல்ல நகர அபிவிருத்தி அதிகாரசபையில் இடம்பெற்றது.
பெத்தகான ஈரநிலப் பூங்கா மற்றும் கோட்டே ரம்பர்ட் ஈரநிலப் பூங்கா ஆகியவை தியவன்னா ஈரநில மையம் என்று அழைக்கப்படுகின்றன.
அந்த நிலையத்திற்காக, டில்மா நிறுவனம் ஒரு வருடத்திற்கு 12.4 மில்லியன் ரூபாய் நிதியுதவியை வழங்குகிறது. இரண்டு பூங்காக்களிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பெயர் பலகைகள் மற்றும் மர அடுக்கு பகுதிகளை மேம்படுத்த இந்த பணம் பயன்படுத்தப்படும்.
திவவன்னா ஈரநில நிலையங்களை மையமாகக் கொண்டு ஆண்டுக்கு சுமார் 100 கல்வித் திட்டங்கள் நடத்தப்படுகின்றன. டில்மா தேயிலை நிறுவனம் அதற்கான நிதி உதவி மற்றும் வள பங்களிப்பை வழங்குகிறது.
1985 ஆம் ஆண்டில், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தால் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட 25 ஹெக்டேயர் பரப்பளவில் பெத்தகான ஈரநில பூங்கா மற்றும் கோட்டே ரம்பர்ட் ஈரநில பூங்கா ஆகியவற்றை உள்ளடக்கியது.
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் (UDA) சுற்றுச்சூழல் மற்றும் நிலப்பரப்பு பிரிவு ஆகியன உலக வங்கி நிதியின் நிதியுதவியுடன் இந்த இயற்கையான சூழலைப் பாதுகாத்துள்ளது.
இந்நிகழ்வில் பிரதி பணிப்பாளர் நாயகம் (சொத்து மற்றும் காணி அபிவிருத்தி) ஈ.ஏ.சி. பிரியஷாந்த, நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் (சுற்றுச்சூழல் மற்றும் நிலப்பரப்பு) திருமதி சந்தனா கலுபஹன உட்பட அதிகாரிகள் குழுவொன்று கலந்துகொண்டது.
0 comments :
Post a Comment