அக்குரணை, குருகொடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பவள விழா, பாடசாலையின் அதிபர் அஷ்ஷேக் எஸ்.எச்.ஹம்சி ஹாஜியார் அவர்களின் தலைமையில் அண்மையில் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம், நிப்போன் நிறுவனத்தின் உரிமையாளர் அல்ஹாஜ் நிஸைஹர் ஹாஜியார், கட்டுகஸ்தொட்டை வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சுஜீவ என்.வீரசுந்தர ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்ட னர்.
விஷேட பேச்சாளராக அஷ்ஷேக் அனஸ் மொஹமட் நளீமி கலந்து கொண்டதுடன், மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களான ஹம்ஜாட் ஹாஜியார், ரியாஸ் ஹாஜியார், கட்சியின் முக்கியஸ்தர்களான றம்சான் ஹாஜியார், நளீஸ் ஹாஜியார் உப்பட பிரமுகர்களும், கல்வித் திணைக்கள அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
0 comments :
Post a Comment