அட்டாளைச்சேனை நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்த கல்வி விருது விழா எதிர்வரும் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு லொய்ட்ஸ் மண்டபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தில் புதிதாக அதிபர்களாக நியமிக்கப்பட்டவர்களை பாராட்டி கெளரவிப்பதோடு கடந்த காலங்களில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற அதிபர்களும் இவ் விழாவில் கெளரவிக்கப்படவுள்ளனர்.
அட்டாளைச்சேனை நலன்புரி அமைப்பின் தலைவர் எம்.ஜே.எம்.அன்வர் நெளஷாத் தலைமையில் இடம் பெறும் இந்நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரிஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான பைசல் காசிம், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம் எஸ் உதுமாலெப்பை, கிழக்கின் கேடயத்தின் தலைவரும், அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன முன்னாள் தலைவருமான எஸ் எம் சபீஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஏ கே அமீர், ஏசி.என்.நிறுவனத்தின் பணிப்பாளர் ஏசி நியாஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவட்ட குழு செயலாளர் ஏ.சி. சமால்தீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் எஸ்.எல்.ஏ.ஹலீம், முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை அமைப்பாளர் ஏ.எல்.அலியார், முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ் உட்பட பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
0 comments :
Post a Comment