சம்மாந்துறையில் இளைஞர் யுவதிகளுக்கான இன நல்லிணக்க செயலமர்வு



அஸ்ஹர் இப்றாஹிம்-
லங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிழக்கு இளைஞர்கள் அமைப்பு CEYSD, ஜே.ஜே பவுண்டேசன், VISIONTRA நிறுவனங்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்த இளைஞர் யுவதிகளுக்கான இன நல்லிணக்க செயலமர்வு அமைப்பின் தலைவர் தானீஸ் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் சம்மாந்துறை சமாதான கற்கைகள் நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வளவாளராக ஐ.எல்..ஹாஸிக் கலந்து சிறப்பித்தார்.
பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மட். ஹனீபா அவர்களும், கெளரவ அதிதியாக சமாதான கற்கைகள் நிலையத்தில் பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்திலுள்ள பல பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கள, தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :