சிலோன் மீடியா போரத்தின் தேசிய தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் உள்ளிட்ட குழுவினருக்கும், இந்திய ஊடகவியலாளர் சாகுல் ஹமீட் ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பு (20) வெள்ளவத்தை கிரீன் பலஸில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது இலங்கை, இந்திய ஊடகவியலாளர்களுக்கிடையில் ஒரு நட்புறவை ஏற்படுத்தும் நோக்கில் இரு நாட்டுக்குமான ஊடக சுற்றுப் பயணமொன்றை ஊடகவியலாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். அவ்வாறு செய்து கொடுப்பதன் மூலம், இரு நாட்டு ஊடகவியலாளர்களின் உறவு இன்னும் வலுப்பெறும் என்று சிலோன் மீடியா போரத்தின் தேசிய தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் எடுத்துரைத்தார்.
மேலும், சிலோன் மீடியா போரத்தின் 5வது வருட பூர்த்தியை முன்னிட்டு, இந்திய, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர்களை கௌரவிப்பது பற்றியும், இரு நாட்டு ஊடகவியலாளர்களின்
நலன் கருதிய பல விடயங்கள் பற்றி மிக விரிவாக கலந்துரையாடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இச்சந்திப்பில், சிலோன் மீடியா போரத்தின் பொதுச்செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
0 comments :
Post a Comment