அமெரிக்க உலகத் தமிழ் பல்கலைக்கழகம் சமூக சேவைக்காக வழங்கிய கலாநிதி பட்டத்தைப் பெற்ற காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு அவர் பிறந்த காரைதீவில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதலாவது வரவேற்பு நிகழ்வு காரைதீவு விக்னேஷ்வரா வித்தியாலய ஆசிரியர் மாணவர்களினால் வரவேற்பு விழா நேற்று சிறப்பாக இடம் பெற்றது. .
இந்த விழா பாடசாலையின் அதிபர் பொன்.பாலேந்திரா தலைமையிலே இடம் பெற்றது.
ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கொரோனா காலகட்டத்திலும் வெள்ள காலகட்டத்திலும் சிறுவயதிலிருந்து சமூக சேவை செய்து வருகின்ற ஜெயசிறிலுக்கான பொருத்தமான சமூகசேவைக்கான கலாநிதி பட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அதனை நாமும் வாழ்த்துகிறோம் என்று அதிபர் வாழ்த்தினார்.
பிரதம அதிதி உரையாற்றுகையில்.. முன்னாள் தவிசாளர் கலாநிதி கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்
" தான் வறுமையின் காரணமாகவே சமூக சேவை செய்து வந்தேன்.கல்வி கற்கும் காலத்தில் பல சிக்கல்களை எதிர்கொண்டதால் வறுமையான மக்களுக்கும் கல்வியில் பின்தங்கிய பிரதேசங்களுக்கும் துயரதுன்பங்களோடு இருக்கின்ற மாணவர்களுக்கும் இந்த உதவியை செய்ய முடிந்தது என உரையாற்றியிருந்தார்.
ஒவ்வொருவருடைய சமூக சேவைக்கும் பின்னால் பல வறுமையும் பல கஷ்டங்களும் இருந்திருக்கும் என்று அவர் கூறினார். அதே போன்று சமூக சேவைக்கான கலாநிதி பட்டம் எனக்கானது அல்ல எனது மாவட்டத்தில் என்னைப்போல் செயற்படுகின்ற சமூக சேவையாளர் முத்தமிழ் வித்தகர் உலகதமிழ் பேராசிரியர் விபுலாநந்தர் அவர்களுடைய தூரநோக்கும் இதுவாகும்.
சமூக சேவை செய்கின்றவர்களுக்குரிய அங்கீகாரமே இங்கு வழங்கப்படிருக்கின்றது.இந்த கலாநிதி பட்டத்தை உலக தமிழ் பல்கலைக்கழகமும் 12 சர்வதேச நாடுகளும் இணைந்து வழங்கியிருந்தாலும் இது சமூக சேவை செய்கின்ற அனைவருக்கும் இது பொருத்தமாகும். என்றார்.
0 comments :
Post a Comment