கல்முனை அல் - பஹ்றியா மகா வித்தியாலயத்தில் கல்முனை வலயக்கல்வி பணிமனையின் அனுசரணையில் பாடசாலை பெண் மாணவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கான மாதாந்த சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.பைசால் தலைமையில் இடம்பெற்ற.இந் நிகழ்வினை வழிகாட்டல் ஆலோசனை பிரிவு ஆசிரியை திருமதி ஏ.எம்.ஜனூன் நௌஸாத் நெறிப்படுத்திருந்தார்.
இந்நிகழ்வுக்கு கல்முனை வலயக்கல்வி பணிமனையின் பிரதிக் கல்வி பணிப்பாளர் திருமதி எம்.எச்.றியாஷா அவர்களும் மற்றும் பாடசாலையின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள் ,ஆசிரியர்கள், பெண் மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment