சாய்ந்தமருது கமு/ லீடர் எம்.எச். எம் அஷ்ரப் வித்தியாலயத்துக்கு Multi Media வழங்கிவைப்பு..!



மாளிகைக்காடு செய்தியாளர்-
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை முன்னாள் பணிப்பாளரும், மயோன் குரூப் தலைவருமான றிஸ்லி முஸ்தபாவின் கல்வி உதவித்திட்டம் (Rizley Musthaffa Education Aid) மூலமாக தனது சொந்த நிதியில் இருந்து சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச். எம் அஷ்ரப் வித்தியாலயத்தின் வேண்டுகோளை ஏற்று பாடசாலையின் Smart Class Room க்கு தேவையாக இருந்த Multi மீடியா மாணவர்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக இன்று கையளிக்கப்பட்டது.

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 01 புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வும் பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் இன்று பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை முன்னாள் பணிப்பாளரும், மயோன் குரூப் தலைவருமான றிஸ்லி முஸ்தபா தனது கல்வி உதவித்திட்டம் (Rizley Musthaffa Education Aid) மூலமாக தனது சொந்த நிதியில் இருந்து இந்த Multi மீடியாவை வழங்கி வைத்தார்.

இந்த வித்தியாரம்ப விழாவில் கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளரும், சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியுமான எம்.என்.எம்.ஏ. மலிக் கௌரவ அதிதியாகவும் மேலும் ஓய்வுபெற்ற சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி எம்.எம். இஸ்மாயில், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு பணிப்பாளர் யூ.எல்.என். ஹுதா உமர், மக்கள் வங்கி உதவி முகாமையாளர் ஏ.எம். றிஸ்வான், முன்னாள் பிரதி அதிபர் அப்துல் நிஸார், பாடசாலையின் பிரதி அதிபர் எஸ்.எம். சுஜான், உதவி அதிபர், ஆசிரிய ஆசிரியர்கள் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :