நிந்தவூர் 'Y Two K' பாலர் பாடசாலையின் விடுகைவிழா, அதன் முகாமையாளரான ஏ.எச்.எம்.லாபிர் தலைமையில், கடந்த (28) ஞாயிற்றுக்கிழமை மாலை கமு/கமு/அல் - பதுரியா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான எம்.ஏ.எம்.அஷ்ரப் தாஹிர், கமு/கமு/ அல் - பதுரியா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி அப்துல் ஜப்பார், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.அஷ்பர் (JP), நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஏ.எல். றியாஸ் ஆதம், ஓய்வு நிலை ஆசிரியர் எம்.ஏ. மசூர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.எச்.எம்.நாளிர் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment