சர்வதேச மகளிர் தினம் 2024 மற்றும் மகளிர் சங்க அங்கத்தவர்களுக்கான இப்தார் நிகழ்வு.



நூருல் ஹுதா உமர்-
"அவளுடைய பலம் - நாட்டுக்கு முன்னேற்றம்" எனும் தொனிப் பொருளுடனான 114 வது சர்வதேச மகளிர் தினமானது நிந்தவூர் பிரதேச செயலக வளாகத்தில் கடந்த 2024.03. 28 ஆம் திகதி 150 மகளிர் சங்க அங்கத்தவர்களுக்கான இப்தார் நிகழ்வுடன் இடம்பெற்றது.

இந்நிகழ்வானது நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம் அப்துல் லத்தீப் அவர்களின் தலைமையிலும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர் றிஸ்வானுல் ஜன்னா அவர்களின் நெறிப்படுத்தலிலும் மகளிர் மகா சங்கம் மற்றும் நிந்தவூர் பிரதேச செயலக பெண்கள் சிறுவர் பிரிவினரினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 50 குறைந்த வருமானம் உடைய பெண்களுக்கு நிந்தவூரைச் சேர்ந்த தனவந்தர் ஒருவரினாலும் "Center for Humanitarian Activities" இனாலும் ரமழான் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ எம் சரீம், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் பைறோஸ், திட்டமிடல் பிரிவு பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் பைசால், கணக்குப் பிரிவின் நிதி உதவியாளர் ஏ. நஜீப், மகளிர் அபிவிருத்தி வெளிக்கள உதவியாளர் ஐ. கிஷோர் ஜஹான், சமூக சேவை உத்தியோகத்தர் முர்சித், உளவளத் துணை உதவியாளர்கள் ஹப்ரத் மற்றும் தஹ்லான், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் இம்றியாஸ், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஹஸீனா, உட்பட சமூக சேவை பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :