ஏறாவூர் பற்று பிரதேச சபையும் சனசமூக நிலைய சம்மேளனமும் பொது நூலகங்களும் இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வு செங்கலடி பிரதேச சபையின் செயலாளர் பா. பற்குணம் தலைமையில் இடம்பெற்றது இன்நிகழ்விற்கு கெளரவ அதிதியாக வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சரும் அபிவிருத்தி குழு. பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் வியாழேந்திரன் உள்ளுராட்சி மன்ற உதவி ஆணையாளர் பிரகாஸ் செங்கலடி பிரதேச சபையின் செயலாளர் பா. பற்குணம் சனசமூக நிலைய உத்தியோகஸ்தர் சனசமூக நிலைய சம்மேளனத் தலைவர் கமல் மக்கள் வங்கி முகாமையாளர், இலங்கை வங்கி முகாமையாளர், சனசமூக நிலையங்களின் தலைவர்கள் கிலிசலிஸ் அமைப்பினர் வர்த்தக சங்கத்தினர் ஆட்டோ சங்கத்தினர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நடைபவனி, சாதனை பெண்கள் கெளரவிப்பு, அதிதிகள் கெளரவிப்பு,
உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் தொழில் சந்தை, பயன் தரும் பழ மரக்கன்று வழங்கல், சனசமூக நிலையங்களினால் செய்யப்பட்ட ஆய்வறிக்கையின் படி பெண்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகளை பற்றிய புத்தகம் அதிதிகளிடம் கையளித்தல் என்பன இடம்பெற்றது
சமூக மட்ட தலைவர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர் பெண் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அடங்கிய திட்ட முன்ழொழிவு கையளித்தல் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment