ஆசிரியர் அம்ஜத் மெய்வல்லுனர் தொழில்நுட்ப அலுவலர் பரீட்சையில் சித்தி!



அஸ்ஹர் இப்றாஹிம்-

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி பழைய மாணவரும், புத்தளம் ,கண்டகுளி முஸ்லிம் மகா வித்தியாலய உடற்கல்வித்துறை ஆசிரியருமான எஸ்.ஐ.எம். அம்ஜத் மெய்வல்லுனர் தொழில்நுட்ப அலுவலர் பரீட்சையில் 84 புள்ளிகளைப் பெற்று சித்சியடைந்துள்ளார்.

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் (Sri Lanka Athletic) நடத்தபட்ட மெய்வல்லுனர் தொழில்நுட்ப அலுவலர் (Athletic Technical Official Grade - 2) தரம் மூன்றிலிந்து தரம் இரண்டுக்கான தரம் உயர்த்தல் பரீட்சையில் கல்முனை ஸாஹிரா கல்லூரி பழைய மாணவரும்,புத்தளம், கண்டகுளி முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியருமான எஸ்.ஐ.எம்.அம்ஜத் தேசிய ரீதியில் சித்தியடைந்துள்ளார்.

இலங்கையின் பல பாகங்களிலும் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் நடத்தப்படும் சகல விளையாட்டுப் போட்டிகளிலும் இவர் பிரதம நடுவராக கடமையாற்றி வருகின்றார்.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற மெய்வல்லூனர் தொழில்நுட்ப அலுவலர் தரம் 3 பரீட்சையில் 86 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் 2ம் இடத்தினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :