இலங்கையின் சுகாதார சேவைகளின் வரலாறும், கிழக்குக் கரையின் சுகாதாரமும் .-டாக்டர் கியாஸ் சம்சுடீன்.



தொடர் -02

சித்த /ஆயுர்வேதத்தின் தோற்றம்

இது பண்டைய இந்தியாவில் பழைய ஒரு விரிவான அறிவியலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என நம்பப்படுகிறது .

சித்த /ஆயுர்வேதத்தின் தோற்றம் பற்றி பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும், தர்க்க மற்றும் நடைமுறைக் கோட்பாடுகளின் அடிப்படையில் சித்த /ஆயுர்வேத மருத்துவம், காலப்போக்கில் மாறாததால், பல யுகங்களைக் கடந்தும் நிலைத்திருக்கிறது.

இது தலைமுறை தலைமுறையாக வாய்வழியாகக் கடத்தப்பட்டு, பிந்தைய காலத்தில் மிகவும் மேம்பட்ட அறிவியலில் ஒன்றாகவும் மாறியது என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

அறிஞர்களின் கூற்றுப்படி முக்கியமான மருத்துவ முறைகளான சித்த /ஆயுள்வேதம், கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னும் மற்றும் உரோம மருத்துவம் கி மு 300 வருடத்திலும் யுனானி மருத்துவம் கி பி 600 இலும்

கிரேக்க மருத்துவம் கி பி 900 இலும் அலோபதி மருத்துவம் கி பி 1600 இலும்
ஹோமியோபதி கி பி 1800 ஆண்டளவிலும் தோற்றம் பெற்றதாக நம்பப்படுகிறது.
அரசர்கள் காலம்தொட்டு வைத்தியர், சமூகத்தில் மரியாதைக்குரிய உறுப்பினராக இருந்ததோடு மட்டுமல்லாமல், ஆட்சியாளர்களான அரசர்கள் மருத்துவம் கற்பதை ஊக்குவித்து, அரச அருட்கொடைகளால் மருத்துவர்களை ஆதரித்தும் வந்துள்ளனர்.

அரசவையில் இணைக்கப்பட்ட அரச வைத்தியர்களைப் போலவே , அரசர்கள் தங்கள் குடிமக்களின் நலனுக்காக மருத்துவம் பார்ப்பவர்களையும் ஆதரித்தும் பராமரித்தும் வந்துள்ளனர்.

ஆயுர் வேத சித்த மருத்துவத்தின் ஒற்றுமை மற்றும் அடிப்படை வேறுபாடு
சித்தாவின் அடிப்படை சித்த கோட்பாடுகளும் அதன் முறைகளும் அநேகமாக ஆயுர்வேத முறைகளை ஒத்திருக்கும்.

இந்த இரு மருத்துவ முறையிலும் மனிதனின் உடலில் ஏற்படும் நோய்களுக்கு வாதம்,பித்தம்,கபம்,ஆகிய மூன்றின் சமநிலை பாதிக்கப்படும்போது தான் நோய் ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது.

தென் இந்தியாவில் சித்தர்கள் மூலம் உருவாக்கப்பட்ட சித்த மருத்துவம் வட இந்தியாவில் தோன்றிய ஆயுர்வேத மருத்துவ முறையிலிருந்து சிகிச்சை முறையிலும் மருந்து கலவையின் சேர்மானத்திலும் சிறிது வேறுபாடு காணப்படுகிறது.

யோகம்,தியானம்,மூலிகை மருத்துவம் மூலம் உடல் நிலையை கட்டுக்குள் கொண்டு வந்து நோயினை போக்கும் சித்த வைத்திய முறையிலிருந்து

நான்கு (சதுர்)வேதங்களை அடிப்படையாக கொண்டு நோயினை குணப்படுத்தும் ஆயுர் வேதம் சிறிது வேறுபடுகிறது.

ஆயுர் மருத்துவ முறையில் நோய்களை தீர்க்கும் மருந்தாக பிரதானமாக மூலிகைகளும் ,காய்கறிகளில் கிடைக்கும் தாது உப்புகள்,மற்றும் பால், ஆகிவையும் பயன்படுகிறது.

இதேவேளை மூலிகைகள் எளிதில் கிடைக்கப் பெறாத வரண்ட பகுதிகளை கொண்ட தென் இந்திய பகுதியில் உருவான சித்த மருத்துவத்தில் மூலிகைகள் மற்றும் அசேதன இரசாயனங்களும் (In organic chemicals) பயன்படுத்தப்படுகிறது.

கனியுப்புக்கள், உலோகங்கள்(கந்தகம், ரத்தினம், உபரத்தினம்), சுத்திகரிக்கப்பட்ட(detoxified ) நச்சுத்தன்மையுடைய பாஷணம்களான ஆர்சனிக் ( Arsenic),அரிதாரம் (Orpiment) பாதரசம்(Mercuery) உபரசம்(‎மெர்குரிக் குளோரைடு), போன்ற அசேதன இரசாயனங்கள் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட சித்த மருத்துவ கலவைகள் நெடுநாட்கள் பேணி வைத்துப் பயன்படக்கூடியவை.

ஆயுர்வேத சிகிச்சை எட்டு கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளது, இதனால் அஷ்டாங்க ஆயுர்வேதம் என்று அழைக்கப்படுகிறது.

இவை,

1.காய சிகிச்சை
பொது மருத்துவம் -உள் மற்றும் வெளிப்புறமாகப் பயன்படுத்தப்படும் மருத்துவ தாவரங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள்.

2.அறுவை மருத்துவம்

3.சிரசு ரோகங்கள்

கண், காது, மூக்கு மற்றும் தொண்டை போன்ற மேல் உறுப்புகளின் நோய்களுக்கான மருந்தியல் மற்றும் அறுவை முறை

4.குழந்தை மருத்துவம்

5.நஞ்சு மருத்துவம்

6.மன நல மருத்துவம்

7.காயகற்பம்

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும், நோய்களைத் தடுக்கவும், உடலைப் புதுப்பிக்கவும் பயன்படும் மருந்துகளின் பயன்பாடு

8.பாலியல் மருத்துவம் என 8 கூறுகளாக எளிதில் புரிந்துகொள்ள வகைப்படுத்தப் படுகிறது.

தேசிய சிகிட்சா அல்லது தேசிய மருத்துவம் (நாட்டு வைத்தியம்)

நாட்டு வைத்தியம் தனித்துவமான ஒரு மருத்துவ சிகிச்சை முறையாகும் இது சித்த /ஆயுர்வேதத்துடன் பல ஒற்றுமைகளையும் வெளிப்படையான வேறுபாடுகளையும் கொண்ட போதும் அதன் உருவாக்கம் பற்றி தெளிவான குறிப்புகள் இல்லை.
உள் நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பல மருந்துகள் சித்த/ ஆயுர்வேதத்தில் காணப்படவில்லை என்பது வெளிப்படையான வேறுபாடாகும் .இது தவிரவும் உள்நாட்டு சிகிச்சையின் அடையாளம் காணக்கூடிய தனித்துவமான எட்டு முக்கிய கூறுகளாவன,

எலும்பு முறிவுகள், கண் நோயியல், வாத ரோகங்கள், பாம்பு கடி, புற்று நோய், தீக்காயம், விசர் நாய் கடி, சரும நோய்கள் ஆகியனவாகும்.

இது தவிர, பெனஸ் வேதகம், யந்திர மந்திர குருகம் (குப்த சாஸ்திரம்), சத்வ வேதகம், விருக்ஷ வேதகம் போன்ற மருத்துவ முறைகளும் சில பரம்பரை மருத்துவர்களின் உள்ளூர் சிகிச்சையில் காணப்படுகின்றன.
தொடரும்.....
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :