தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தகவல் பிரச்சாரப் பிரிவினால் 25 மாவட்டங்களில் இருந்தும் 25 ஊழியர்களை தெரிவு செய்து அவர்களுக்கு சமூக ஊடக வலையத்தளங்கள் ஊடாக தத்தமது மாவட்டங்களில் நடைபெறும் வீடமைப்பு அபிவிருத்திகள் மக்களின் குறைபாடுகள் மற்றும் பிரச்சாரப்படுத்துவதற்காக சமூக ஊடக பயிற்சிக் கருத்தரங்கு கொழும்பில் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரனி ரஜிவ் சூரியாராச்சி மற்றும் பொது முகாமையாளர் பொறியியலாளர் ஜானக்க, மற்றும் உதவி பொது முகாமையளர் சுபசிங்க ஆகியோர்கள் ஏற்பாடு செய்து கலந்து கொண்டனர்.
அத்துடன் இத்துறையில் விசேட பயிற்சி பெற்ற ஏசியன் மிரர் வெப்தள ஆசிரியர் மற்றும வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் உள்ள தமிழ் பேசும் வீடமைப்பு அலுலவகர்களுக்கும் சமூக வலைத்தளங்கள் பற்றிய ஊடக விரிவுரைகளை தமிழ் மொழியிலும் நடைபெற்றது.
முழுநாள் பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்களுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சட்டத்தரனி ரஜிவ் சூரியாரச்சியினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment