கல்லுரியின் வரலாற்றில் முதற் தடவையாக நோன்பு காலத்தில் ஆன்மிகம், ஒழுக்கம், தலைமைத்துவம், இஸ்லாமிய பண்பாடுகள் அடிப்படையில் மாணவிகளின் ஆளுமை விருத்தியினை மேம்படுத்தும் நோக்கில் "ரமாழனில் ஒரு நாள்" எனும் தொனிப்பொருளில் ஒரு நாள் இஸ்லாமிய தலைமைத்துவப் பயிற்சி முகாம் உயர்தர கலை வர்த்தக பிரிவின் பகுதித்தலைவி ஜ.எல்.எம்.எச். ஷம்சுல் ஹிதாயா தலைமையில் கல்லூரியின் ஸ்மார்ட் வகுப்பறை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரியின் முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ், சிறப்பு விருந்தினராக இக்கல்லூரியின் ஆசிரியையும் முன்னாள் பகுதித்தலைவியுமான றிப்கா அஸ்மி காரியாப்பர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் உயர்தரம், தரம் 11 மற்றும் விடுதி மாணவிகள் என 50க்கும் மேற்பட்டவர்கள் இஸ்லாமிய தலைமைத்துவப் பயிற்சி முகாம் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
காலை 5:00 சுபஹ் தொழுகையுடன் ஆரம்பமான நிகழ்வானது
இஸ்லாமிய தலைமத்துவப் பயிற்சி ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் ஜ.எல்.எம்.எச். ஷம்சுல் ஹிதாயா, அல் குர்ஆனின் ஒளியில் உயிரியல், பௌதீகவியல் மற்றும் இரசாயனவியல் தலைப்பில்
பற் சுகாதார வைத்திய நிபுணர் டாக்டர். எம்.ஆர்.எப். சுர்பா, பண்பட்ட சமூக உருவாக்கத்தில் கல்வியின் பங்களிப்பு மெளலவி. ஆசிரியர் ஏ. கலிலூல் றஹ்மான், சமநிலை ஆளுமை உயர்தர உயிரியல் பெளதீக விஞ்ஞான பிரிவு பகுதித்தலைவர் எஸ். இம்தியாஸ் ஆகியோரினால் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.
ஐவ்வேளைத் தொழுகை, ழுஹாத் தொழுகை, ஹிஸ்புல் குர்ஆன், கலை நிகழ்ச்சிகள், மாலை நேர துஆக்கள், ரமழான் கற்றுத்தரும் படிப்பினைகள் தொடர்பான மார்க்க சொற்பொழிவுகள் என பல்வேறுபட்ட இஸ்லாமிய நிகழ்வுகள் இடம் பெற்றன.
இறுதியாக இப்தார் நிகழ்வுகளுடன் பங்குபற்றிய மாணவிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான ஹாஜியானி எஸ்.எஸ்.எம். சமதா மசூது லெவ்வை, ஏ.எச். நதீரா, உதவி அதிபர் என்.டி நதீகா, தரம் 11 பகுதி ஆசிரியர்கள், மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment