கத்தாரில் இயங்கி வரும் இலங்கை பாடசாலையான
அல்அஷ்பால் சர்வதேச பாடசாலையின் அதிபரான மொஹமட் ரிஷா அவர்களின் தலைமையில் இந்த இப்தார் நிகழ்வானது நேற்றைய தினம் (28) பாடசாலை வளாகத்தில் மிக சிறப்பாக இடம் பெற்றது.
இந்த நிகழ்வில், கத்தாரின் தொழிலதிபரில் ஒருவரான பர்ஹான் அல் ஷேக் அல் சயீத், கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரியான ரஷீத் எம். பியாஸ், இலங்கை முஸ்லிம் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான ரினோஸ் ஸாலிஹீன் மற்றும் CDF QATAR அமைப்பின் தலைவரும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.
மேலும் இந்த இப்தார் நிகழ்வில் அப்பாடசாலையின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்துக் கொண்டனர்.
0 comments :
Post a Comment