பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் விழுமியப் பண்பை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கான விழுமியக் கல்வி பயிற்சிப் பட்டறை பெரியகல்லாறு விநாயக வித்தியாலயத்தில் வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.சிறீதரன் தலைமையில் சத்திய சாயி கல்வி நிறுவகத்தின் அனுசரணையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் இ.ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டதுடன் சத்திய சாயி கல்வி நிறுவகத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் திரு.புனேந்திரன், கிழக்கு மாகாண இணைப்பாளர் திரு.விநாயகமூர்த்தி ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
இணைப்பாளர்களாக பங்குபற்றிய ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment