ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் ஊடக அறிக்கை!



க்கிய காங்கிரஸ் எனும் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவராக இருந்த சி எம் மழ்ஹர்தீன் மற்றும் உப தலைவர் எம் எஸ் எம் சப்வான் ஆகியோர் அவர்கள் வகித்த நிர்வாக பதவிகளிலிருந்து முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவா கூறியுள்ளதாவது,

கடந்த 5.1.2024ல் கட்சியின் யாப்பின் பிரகாரம் கல்முனையில் நடைபெற்ற ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் வருடாந்த உயர்சபை பொதுக்கூட்டத்தில் சி எம் மழ்ஹர்தீன் என்பவர் கட்சியின் பிரதி தலைவராகவும், எம். எஸ். எம். சப்வான் என்பவர் உப தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.

அதன் பின் அவர்கள் அவ்வாறு நியமிக்கப்பட்டு இரண்டு வாரங்களின் பின் கட்சியின் நிர்வாக தெரிவுக்கும், கட்சி தலைமைக்கும் எதிராக இருவரும் பேஸ்புக், வட்சப் மூலம் பல பொய்யான ஆதாரமற்ற கூற்றுக்களை எழுதினர். அத்துடன் எனது பெயரிலும் எமது கட்சியின் பெயரிலும் போலி முகநூல்களை திறந்து நான் எழுதுவது போல் பொய்யான தகவல்கனை எழுதி கட்சிக்கும் தலைமைக்கும் அபகீர்த்;தி ஏற்படுத்தினர்.

அது போல் கட்சியின் அனுமதி இன்றி கட்சி பெயரில் போலி முகநூல் பேஜ் திறந்து அதில் அவரும் கட்சியின் எம் எஸ் எம் சப்வான் என்பவரும் பொய்களை, அபாண்டங்களையும் எழுதியதுடன் கட்சி எடுக்காத தீர்மானங்களை எடுத்ததாக பொய் கூறி வந்தனர்.

அது மட்டுமின்றி இவர் 'ஐக்கிய காங்கிரஸ் கட்சி'யின் தலைவராக 23.01.2024 அன்று தெரிவு செய்யப்பட்டதாக பொய்யாக எழுதி தேர்தல் திணைக்களத்தையும் பொது மக்களையும், கட்சி ஆதரவாளர்களையும் பிழையாக நடாத்தினார்.

அது போல் 11.02.2024 அன்று உயர் பிடத்தை கூட்டியதாகவும் அதில் சப்வான் என்பவர்  ஐக்கிய காங்கிரசின் செயலாளர் என்பது போலவும் ஊடகங்களுக்கு பொய்யாக எழுதியதோடு முக நூலிலும் எழுதினர். கட்சியின் உயர் பீட கூட்டத்தை இவர்கள் கூட்டவுமில்லை, கூட்டுவதற்கு கட்சியின் பிரதி தலைவருக்கோ, உப தலைவருக்கோ யாப்பின் பிரகாரம் எந்த அதிகாரமும் இல்லை. அதற்குரிய அதிகாரம் கட்சியின் தலைவருக்கும் செயலாளருக்கும் மட்டுமே உண்டு.

இவர்களின் இத்தகைய பொய்யான செய்திகளுக்கு நாம் உடனுக்குடன் மறுப்பறிக்கை வெளியிட்டதுன் இவர்களின் முக நூல் அபாண்டங்கள் பற்றி; பாதுகாப்பு அமைச்சுக்கும் முறைப்பாடு செய்துள்ளோம். மட்டுமின்றி கட்சியின் அனுமதியின்றி கட்சியின் தலைவர் தான் என கள்ள றபர் ஸ்டாம், போல் லெட்டர் ஹெட் செய்துள்ளதையும் அறிந்தோம். இதற்கு கட்சியோ கட்சியின் உயர்பீடமோ எந்த அனுமதியும் வழங்கவில்லை.

கட்சியை சங்கடத்துள்ளாக்கும் வகையில் கட்சி பற்றிய தப்பபிப்பிராயத்தை மக்கள் மத்தியில் பொய்யாக பரப்பும் இவர்களின் இத்தகைய செயல்கள் காரணமாக இவர்களை கட்சியின் உயர்பீடம், அதன் நிர்வாக பதவிகளிலிருந்து நீக்குவதற்கு கட்சித்தலைமைக்கு இருக்கும் அதிகாரத்தின்படி முடிவெடுத்து. இது பற்றி அவர்களுக்கு முறையே 07 மற்றும் 08.2.2024 அன்று கட்சி யாப்பின் பிரகாரம் வட்சப் மூலம் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அத்துடன் இதற்கான கடிதம் என்னால் எழுதப்பட்டு ஒப்பமிடப்பட்டு 11.2.2024 அன்று இவர்களது சொந்த வட்சப்பக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் பிரதியை தேர்தல் திணைக்கள அதிகாரியின் உத்தியோகபூர்வ வட்சப்புக்கு 12.2.2024 அன்று என்னால் அறிவிக்கப்பட்டது.

இது பற்றி கட்சிக்கு மணு செய்ய அவர்களுக்கு 21 நாள் அவகாசம் வழங்கப்பட்டும் எத்தகைய மணுவும் செய்யாததால் அவர்கள் நீக்கம் உறுதியானது.

பின்னர் 28.02.2024ல் கல்முனையில் நடைபெற்ற ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் விசேட உயர்பீட மற்றும் நிர்வாக சபையின் கூட்டத்தில் மழ்ஹர்தீன் மற்றும் சப்வான் பற்றியும் அவர்கள் கட்சிக்கெதிராக நடந்து கொண்டவை பற்றியும் விளக்கமளிக்கப்பட்டு அவர்கள் இருவரும் கட்சியின் உயர் பீட உறுப்பினர் மற்றும் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதை சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டு அதனை உறுதிப்படுத்தியது. அத்துடன் மேற்படி இருவரின் பதவிகளுக்கு புதியவர்களையும் சபை ஏகமனதாக தெரிவு செய்தது. அதன்படி பிரதி தலைவராக சி எம் வை இஸ்ஸதீனும் உப தலைவராக சசிகுமார் ராமசாமியும் தெரிவு செய்யப்பட்டனர். இது பற்றி தேர்தல் ஆணைக்குழுவுக்கும் கூட்டறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதிய நிர்வாகத்தை தேர்தல் ஆணையகம் ஏற்று அறிவிக்கும் வரை கட்சியின் தற்காலிக தலைவராக செயல்பட கட்சியின் உயர்பீடம் எனக்கு அனுமதித்துள்ளது. மேலும் தேர்தல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வெப்சைட்டின்படி இன்னமும் நானே கட்சியின் தலைவராக இருக்கிறேன்.

ஆகவே சி எம். மழ்ஹர்தீன் என்பவரும் சப்வான் என்பவரும் இப்போது ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் எந்தவொரு பதவியிலும் இல்லை என்பதை நான் இத்தால் உறுதிப்படுத்துகின்றேன்.

முபாறக் அப்துல் மஜீத்
தலைவர் 
ஐக்கிய‌ காங்கிரஸ் க‌ட்சி.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :