சிலோன் மீடியா போரத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசலில் போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் தலைமையில் நடைபெற்றது.
இந்த இப்தார் நிகழ்வில் கிழக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஏ.மன்சூர், தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் கலை,கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாசில், வீதி அபிவிருத்தி அதிகார சபை கிழக்கு மாகாண காரியாலய நிறைவேற்று பொறியியலாளர் ஏ.எம் றியாஸ், சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை செயலாளர் எம்.ஐ.மன்சூர், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் பிரத்தியேக செயலாளர் நெளபர் ஏ.பாவா, சாய்ந்தமருது மஸ்ஜிதுல் பலாஹ் தலைவர், பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எம். நெளபர் சாய்ந்தமருது பிரதேச செயலக தலைமைப் பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம், கல்முனை பிரதேச செயலக தலைமைப் பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ், நிந்தவூர் பிரதேச செயலக தலைமைப் பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.அன்வர், நாவிதன்வெளி பிரதேச செயலக சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.எம் முபீன் உள்ளிட்ட திணைக்கள தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், உலமாக்கள், கல்விமான்கள், அரச உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ரமழான் பற்றி மார்க்க சொற்பொழிவினை சாய்ந்தமருது மஸ்ஜிதுல் பலாஹ் பேஷ் இமாம் மெளலவி ஏ.நௌபர் நிகழ்த்தினார்.
சிலோன் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம். முஜாஹித்தின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வு சிலோன் மீடியா போரத்தின் பொருளாளர் நூருல் ஹுதா உமரின் நன்றி உரையுடன் நிறைவு பெற்றது.
0 comments :
Post a Comment