கல்முனை கல்வி வலய இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய வருடாந்த இப்தார் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் மார்க்க சொற்பொழிவை அல்ஹாபிழ் மௌலவி முஹம்மட் கியாஸ் நிகழ்த்தியதுடன் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் புனித ரமழான் சிந்தனையை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிமனை நிர்வாக பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச். ஜாபீர், கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எம். ரம்சீன் பக்கீர், கல்முனை கோட்டக்கல்வி அதிகாரி யூ.எல்.எம். றியால், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினர் யூ.எல்.என். ஹுதா உமர், கல்முனை பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும் ஓய்வு பெற்ற அதிபருமான ஏ.ஏ.கபூர், கல்முனை கல்வி வலய அதிபர் சங்க தலைவர் இஸட். அஹமட், வர்த்தக பிரமுகர்கள், தொழிலதிபர்கள், தனவந்தர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment