கல்முனையில் நேற்று முன்தினம் (29) வெள்ளிக்கிழமை இரவு மெழுகுவர்த்தி போராட்டம் களைகட்டியது.
கல்முனை வடக்கு பிரதேச தமிழ் மக்கள் அரச சேவைகளை பெறும் அடிப்படடை உரிமைகள் தொடர்ச்சியாக திட்டமிடப்பட்டு மாற்றின அரசியல்வாதிகளால் பறிக்கப்பட்டு வருகின்றமையை எதிர்த்து நேற்று முன்தினம் ஐந்தாவது நாளாக பொதுமக்கள் போராட்டம் இடம் பெற்றவேளை அன்றிரவு இந்த மெழுகுவர்த்தி போராட்டம் நடாத்தப்பட்டது.
மாலை 7.00 மணிக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அங்கு முதற் தடவையாக அரசியல்வாதிகள் பங்கேற்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான தவராசா கலையரசன் ச.கஜேந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊடகங்களுக்கு கருத்தும் வழங்கினார்கள்.
கடந்த ஆறு நாட்களாக பெருமளவில் பொதுமக்கள் அடையாள அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அரச சேவையை .
பெறும் தங்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் இனவாத அதிகார அத்துமீறலுக்கு அரசு இடமளிக்ககூடாது இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளருக்கும் இனவாத அரசியல்வாதிகளுக்கும் தங்கள் கண்டனங்களை மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் 30 வருடங்களாக தடுக்கப்பட்டு வருவதுடன் அண்மைக்காலமாக இருக்கும் அதிகாரங்களும் பறிக்கப்பட்டும் வருகின்றன.
பறிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை பெறுவதற்கும் இயங்கிக் கொண்டிருக்கின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான அரச அதிகாரங்களை பெற்று மக்களுக்கான அரச சேவையை பெறுவதற்கு முடியாமல் கடந்த 30 வருடங்களாக தவித்துக் கொண்டிருக்கும் இப் பிரதேச மக்கள் அமைதிப்போராட்டத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment