இலங்கையின் சுகாதார சேவைகளின் வரலாறும், கிழக்குக் கரையின் சுகாதாரமும். -டாக்டர் கியாஸ் சம்சுடீன்



தொடர் 01
அறிமுகம்:
னித இனத்தின் அமைதிக்கும் ஆரோக்கியத்திற்கும் விடுதலைக்கும் முன்னேற்றத்திற்கும் உணர்வாகவும் உந்துதலாகவும் காரணியாகவும் இருக்கும் எமது பண்பாட்டுக் கூறுகளான சமூக பொருளாதார கலை கலாசார அரசியல், மற்றும் கல்வியின் வரலாறு போலவே சுகாதாரதுறையின் வரலாறும் முக்கியத்துவம் பெறுகிறது.

அவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த சுகாதார துறையை சர்வதேச தரத்திற்கு முன்னேற்றுவதில் நமது மருத்துவ முன்னோடிகளின் மகத்தான பங்களிப்புகள் மற்றும் தியாகங்கள், சுகாதார துறையினரின் நிகழ்கால அர்ப்பணிப்புகள், சேவைகள், மற்றும் அரசர்கள் காலம் தொட்டு இன்றுவரை சுகாதார சேவையை வழங்குவதற்காக பாடுபட்ட அனைத்து அரசுகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், அரசியல் ஆளுமைகள் பற்றிய அறிவு எமக்கு பயனுள்ள ஒன்றாக இருக்கும் என்ற காரணத்தினால் அதனை அறிய ஆவலாக இருக்கின்ற மக்களுக்காக இந்த தொடர் எழுதப்படுகிறது.

வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்றை, மனிதனின் கடந்த கால நிகழ்வுகளின் ஆய்வு என வரையறுக்கின்றனர் . விக்கிப்பீடியாவின்படி மருத்துவ வரலாறு என்பது , பயிற்சி பெற்ற வல்லுநர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட மருத்துவத்தின் வரலாறு, மற்றும் பண்டைய காலங்களிலிருந்து இன்றுவரை நோய் மற்றும் இயலாமைக்கான அணுகுமுறையில் சமூக மாற்றத்தின் வரலாறு எனப்படுகிறது .

மேலும், ஏனைய வரலாறுகளை போலவே மருத்துவத்தின் வரலாறு பற்றி அறிவதன் மூலம் வருங்கால மற்றும் நிகழ்கால சந்ததியினர் ஆரோக்கிய அறிவியலின் சவால்களை முறியடித்து முன்னேறவும் இன்று நாம் இருக்கும் இடத்தை எவ்வாறு அடைந்திருக்கிறோம் என்பதை அறியவும் அங்கீகரிக்கவும் உதவும்.

பண்டைய இலங்கையில் நடைமுறையில் இருந்த பாரம்பரிய/சுதேச மருத்துவம்.

இந்த பாரம்பரிய அடிப்படையிலான சுகாதார பன்மைத்துவமானது தேசிய சிகிட்சா (நாட்டு வைத்தியம் ), ஆயுர்வேதம், சித்தா, யுனானி, குத்தூசி மருத்துவம் மற்றும் பிற உள்ளூர் மரபுகளை கொண்டிருந்தது.

1961 ஆம் ஆண்டின் ஆயுர்வேத கட்டளை சட்டம் 31இன் (Act No 31), 89ம் பிரிவின்படி சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவமுறைகள் யாவும் 'ஆயுர் வேதம்' என்பதனுள் அடக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஆயுர்வேத வைத்தியமானது சிங்கள மக்களாலும், சித்த மருத்துவமானது தமிழ் மக்களாலும் யுனானி மருத்துவமானது முஸ்லீம் மக்களாலும் பின்பற்றப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் பண்டைய கலாச்சாரம், மற்றும் ஆன்மீகம், இலங்கையிலும் பின்பற்றப்பட்டது போலவே இந்தியாவில் நடைமுறையில் இருந்த மருத்துவ முறையையும் ஆரம்ப காலத்திலிருந்தே, இலங்கை மக்களாலும் அதிகம் கடைப்பிடிக்கப்பட்டது .

பண்டைய மூலதாரங்களான வரலாற்று பதிவுகள், பலகை கல்வெட்டுகள், பாறை கல்வெட்டுகள், பனை ஓலை எழுத்துக்கள் மற்றும் மருத்துவ கலைப்பொருட்கள் பலவற்றின் அடிப்படையில் பண்டைய இலங்கையர்கள் ஒரு மயக்கும் பன்மைத்துவ பாரம்பரிய மருத்துவ சேவையை உருவாக்கி வைத்திருந்தனர் என்பதை வெளிப்படுத்துவதுடன் தீவின் ஆரம்பகால வரலாற்றுப் பதிவுகளில் மருத்துவம் மற்றும் மருத்துவப் பயிற்சியாளர்கள் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன.

இலங்கையின் பூர்வீக மருத்துவர்கள் பின்பற்றிய முறை சித்த /ஆயுர்வேதம் என்பது வெளிப்படையானது, இருப்பினும் இயற்கையாகவே, தீவுக்கு தனித்துவமான மருந்துகள் மற்றும் முறைகளும் இருந்தன. இதை நாம் நாட்டு மருத்துவம் அல்லது 'தேசிய சிகிட்சா' என்றழைத்தோம். சமஸ்கிருத வார்த்தையான சிகிட்சா நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை என்று பொருள்படும் .

இலங்கையில் பாரம்பரிய நாட்டு வைத்தியம் (தேசிய சிகிட்சா) உட்பட மேற்குறிப்பிட்ட அனைத்தும் சுதேச மருந்துவ முறைகளில் கூறுகளாக கருத்தப்பட்டு சுதேச வைத்தியம் எனும் பொதுப்பெயரில் அழைக்கப்படுகிறது.

தொடரும்...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :