மட்டக்களப்பு, பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை -) களுவாஞ்சிகுடி மாணவர்கள் இளம் ஆராய்ச்சியாளர் போட்டியில் பங்குபற்றி தேசிய ரீதியில் வெற்றி பெற்றதுடன் கல்வி அமைச்சினால் முதல் தடவையாக நடாத்தப்பட்ட ஆராய்ச்சியாளர் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டு NextGen Insights நாளிதழில் பட்டிருப்பு தேசிய பாடசாலையின் பெயரையும் பொறித்துள்ளனர்.
பாடசாலை மாணவர்களான ம.தசாப்தன், தி.சேம், சு. சுமித்ரா, த.வேதுஜா, கோ.சஸ்மிகா, அ.சஜித், ர.கேனுசாந், வ.பத்மலோஜனி, ச.திருத்திகா, சி.தரண்யா மற்றும் வழிகாட்டிய பாடசாலை ஆசிரியர்களான செல்வராஜா தேவகுமார், தங்கராசா யுதர்சன் ஆகியோருக்கு அதிபர் உள்ளிட்ட பாடசாலை சமூகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
இந் நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட பதினைந்து பாடசாலைகளில் தமிழ்மொழியில் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு பாடசாலை பட்டிருப்பு தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடி என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment