பிரதேசமட்ட கரப்பந்து மற்றும் கபடி போட்டிகளில் கல்முனை றியலியன்ஸ் விளையாட்டு கழகம் சம்பியன் பட்டத்தை பெற்றுக் கொண்டது.
கல்முனை பிரதேச கழகங்களுக்கிடையிலான பெருவிளையாட்டுகளில் ஒன்றான கரப்பந்து,கபடி இறுதி சுற்றுப் போட்டிகள் கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலய தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற போது சம்பியனாக றியலியன்ஸ் விளையாட்டு கழகம் தெரிவு செய்யப்பட்டது.
இரண்டாம் இடத்தை பிரில்லியன் விளையாட்டு கழகம் பெற்றுக் கொண்டது. கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி அவர்களின் வழிகாட்டலில் இடம் பெற்ற குறித்த போட்டித் தொடரை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் ஆர்.றப்ஸான் அஹமட் நடாத்தினார்.
போட்டிக்கு அதிதிகளாக அல்-பஹ்ரியா தேசிய பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.பைசால் அவர்களும் உதவி அதிபர் ஏ.ஆர்.எம்.முஷாஜித் அவர்களும் பிரில்லியன் விளையாட்டுக் கழகத்தின் பொதுச் செயலாளர் எஸ்.டி.எம்.பஸ்வாக் அவர்களும் போட்டி நடுவர்களாக எம்.ஏ.எம்.றியால், ஏ.டப்ளியு.ஆஷாட்கான் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment