நாடளாவிய ரீதியில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 'யுக்திய' விசேட சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் அண்மையில் (25) நாவிதன்வெளியில் முன்னெடுக்கப்பட்டது.
சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.எஸ்.கே.தசநாயக தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அம்பாறை – கல்முனை ஊடான நாவிதன்வெளி வீதியில் கிட்டங்கி பாலத்திற்கருகில் இந்த விசேட தேடுதல் மற்றும் பரிசோதனை நடவடிக்கை இடம்பெற்றது.
இதன்போது போக்குவரத்தில் ஈடுபட்ட வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்துச்சென்ற பொருட்கள் என்பன மோப்ப நாயின் உதவியுடன் சோதனை செய்யப்பட்டன.
சட்டரீதியற்ற போதைப்பொருள் பாவனை மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment