இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட்/ விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ச.திருநாவுக்கரசு தலைமையில் பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
கல்விக்கு வறுமை தடையாக இருக்க கூடாது என்று "ஏழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்" எனும் தொனிப்பொருளில் இணைந்த கரங்கள் அமைப்பானது மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கஷ்ட பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். சிறிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் பட்டிருப்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் அருள்ராசா அவர்களும் பாடசாலை ஆசிரியர்களான பே.கணேசலிங்கம், செல்வி. சீ.விஜிதா, திருமதி. ந.கௌசல்யா இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான, சி.காந்தன், சி.துலக்சன், ஏ.எம்.ரிஸ்வான் உட்பட பலரும் கலந்து கொண்டு மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
0 comments :
Post a Comment