இலங்கையின் சுகாதார சேவைகளின் வரலாறும், கிழக்குக் கரையின் சுகாதாரமும்.-டாக்டர் கியாஸ் சம்சுடீன்



தொடர் 05
கிழக்கு மாகாணம் கண்டிராச்சிய மன்னர்களின் ஆளுமைக்குள் உட்பட்டிருந்தாலும் தமிழ் வன்னிமைகளே நேரடி ஆட்சி செலுத்தினர். மேலும் சிங்கள பிரதேசங்களை போலல்லாது தமிழ் பிரதேசங்களில் வம்சாவழி பெயர் கொண்டு மக்கள் அறியப்படும் வழக்கம் இல்லாததால் இங்குள்ள முஸ்லீம்களிடையே இவ்வாறான வம்சாவழி பெயர்களை பொதுவாக காணமுடிவதில்லை.

ஆனாலும் ஒரு சில "பாச்சா பரிசாரி" வைத்திய பரம்பரையினரை சில ஊர்களில் காணமுடிகிறது.

சில நூற்றாண்டுகளுக்கு முன் அரேபிய மற்றும் பாரசீக காதிரிய்யா தரிக்காவை சேர்ந்த சூபிகள் மார்க்க பிரச்சாரத்திற்காக இந்திய உப கண்ட நாடுகளுக்கு விஜயம் செய்தபோது தங்களோடு யூனானி வைத்தியர்களையும் அழைத்து வந்திருந்தனர். இவ்வாறு வந்த

இவ்வைத்தியர்களில் சிலர் அரச மாளிகையில் தங்கிவிட சிலர் நாட்டின் பல பாகத்திற்கும் சென்று மக்களுக்கு வைத்திய சேவை செய்தனர்.

அரசர்களுக்கான தனிப்பட்ட வைத்தியர்கள் "வாசல வைத்தியர்கள்" என சிங்கள பிரதேசங்களில் அறியப்பட்டது போல் இவர்கள் தமிழ் பிரதேசங்களில் "பாதுஷா பரிகாரி" என அழைக்கப்பட்டதாக வாய்வழிக்கதைகள் எமது பகுதியில் காணப்படுகிறன .
அராபிய மற்றும் பாரசீக மொழிகளில் அரசனை குறிக்கும் "பாதுஷா" என்ற சொல் இந்திய துணைகண்டத்திற்கும் பரீட்சையமானது என்பதால்

இவ்வாறு அவர்கள் அழைக்கப்பட்டிருக்கக் கூடும்.

"பாதுஷா பரிகாரி " என்ற சொல் திரிபடைந்து காலப்போக்கில் "பாச்சாப் பரிசாரி" என்றும் பாச்சாப் பரிசாரி மேலும் திரிபடைந்து "பிச்சை பரிசாரி" எனவும் ஆகிற்று.
இவ்வாறான பரிகாரி பரம்பரையினர் சாய்ந்தமருது மாவடிப்பள்ளி நிந்தவூர் ஒலுவில் அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று உட்பட அநேக ஊர்களில் காணப்பட்டாலும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள்கள் வம்சாவழிப் பெயர்கொண்டு அழைக்கப்படவில்லை.

"ஹக்கீம்" என்ற சொல்லுக்கு ஞானம், அறிவு, வைத்தியன் என பல கருத்துக்கள் இருப்பதானால் யுனானி வைத்தியர்களை ஹக்கீம் என்றும் அழைப்பதும் உண்டு. சில யுனானி வைத்தியர்கள் தங்கள் பெயர்களுடன் "ஹக்கீமுல் ஷா" என்ற புனைப்பெயர்களை கொண்டிருப்பதையும் எமது பிராந்தியத்தில் அவதானிக்க முடிகிறது. இவை தவிர வேறு பரம்பரை பெயர்களோ புனைப்பெயர்களோ பெரிதாக புழக்கத்தில் இல்லை.

சித்த ஆயுர்வேதம் போலவே செயல்திறன் மற்றும் மதிப்பும் நிறைந்த யுனானி முறையும் இலங்கையின் பாரம்பரிய மருத்துவ முறைகளுடன் ஒன்றிணைந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைக்குள் உள்வாங்கப்பட்டதுடன்,

இலங்கையில் 1926ல் உருவான சுதேச வைத்தியக் கல்லூரியில் அதன் ஆரம்பம் முதல் ஒரு பிரிவாக அதனை நிலைநிறுத்த

அப்போதய மருத்துவக் குழுவின் உறுப்பினரான சேர் ராசிக் பரீத் அவர்களின் பங்களிப்பு மகத்தானது. சுதேச மருத்துவக் கல்லூரியில் ஆயுர்வேதம் மற்றும் சித்தா பிரிவுகளுடன் யுனானி பிரிவை நிறுவுவதற்கு இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட விரிவுரையாளர்களான டாக்டர் எம்.ஏ.அஹமது மற்றும் டாக்டர்.எச்.எம்.ஜாஃபர் ஆகிய இருவரில் டாக்டர் எச்.எம்.ஜாஃபர் யுனானி பிரிவின் முதல் தலைவராக (Head of the Department ) இருந்தார்.

டாக்டர் எச்.எம்.ஜாஃபருக்கு பின் டாக்டர் எம்.எச்.எம்.ஹபீலும் ,1977 இல் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வரை எமது மண்ணின் மகிந்தன் முன்னாள் பொத்துவில் MP டாக்டர்.எம்.ஏ.எம்.ஜலால்தீன் அவர்களும் , அவரை தொடர்ந்து டாக்டர் எம்.ஐ.வில்லியம் ஆகியோரும் யுனானி பிரிவுத் தலைவர் பதவியை வகித்தனர். யுனானி பிரிவை வளர்த்தெடுப்பதில் இவர்கள் அனைவரினதும் பணி மத்தானது.
முன்னாள் கல்வி அமைச்சர் Dr பதியுதீன் மஹ்மூத் உடனான Dr M.A.M ஜலால்தீனின் தொடர்பு ஆயுர்வேத கல்லூரியை பல்கலைக்கழக அந்தஸ்துக்கு உயர்த்த கணிசமான பங்களிப்பை செலுத்தியது என்று கூறினால் அது மிகையில்லை. இவரின் இந்த சேவையை கெளரவிக்குமுகமாக அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு "டாக்டர் ஜலால்தீன் ஞாபகார்த்த வைத்தியசாலை" என பெயரிடவேண்டும் என்று முயற்சிகள் எடுக்கப்பட்டும் அது இதுவரை நிறைவேறவில்லை.

தொடரும்......
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :