காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் அவர்களின் வழிகாட்டலில் மற்றும் GAFSOன் அனுசரணையில் "இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தல்" என்பதற்கமைவாக *இளைஞர்கள் மத்தியில் வன்முறை மற்றும் தீவிரவாதபோக்கு சிந்தனைகள் தூண்டப்படுவதிலிருந்து தடுத்தல்* எனும் கருப்பொருளிலான செயற்திட்டத்தின் மூன்றாம் நிகழ்ச்சி "சமூக ஒருமைப்பாட்டினூடாக இளைஞர்களுக்கான தலைமைத்துவ திறனை வலுப்படுத்தல்" எனும் தலைப்பிலான விரிவுரை உளவளத்துணை உத்தியோகத்தர் ரீ.எம்.எம்.ஹப்ரத் அவர்களினால் காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர், GAFSO ன் மாவட்ட செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment