முன்னாள் பொதுச் சேவை ஆணைக்குழு (Public Service Commission) உறுப்பினர்ஏ.எல்.எம். சலீமின் முகநூலிலிருந்து...



இலங்கை நிருவாக சேவை (Sri Lanka Administrative Service) ஒரு சுருக்கமான பார்வை!
ண்மையில் பதிவொன்றைப் பார்த்தேன் இலங்கை நிருவாக சேவை (SLAS) சம்பந்தமாக சுருக்கமான விளக்கம் ஒன்றை முகநூல் நண்பர்களுக்கு பதிவிடுகின்றேன்.
இலங்கை நிருவாக சேவை வரலாற்றைப் பொறுத்தவரை பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் போது இலங்கையின் கரையோர நிருவாகம் கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகளால் மேட்றாசிலிருந்து (Medtras) மேற்கொள்ளப்பட்டது.
1796இல் இலங்கையின் கரையோர பிரதேசம் முழுவதும் பிரித்தானிய கட்டுப்பாட்டில் வந்தவுடன் 1802ஆம் ஆண்டில் பெரிய பிரித்தானியாவிலிருந்து அதிகாரிகள் இங்கு நியமிக்கப் பட்டனர். இதுவே முதல் சிவில் சேவையின் ஆரம்பமாக அமைந்தது. 1833ஆம் ஆண்டில் பிரித்தானிய சிவில் சேவையை அடிப்படையாகக் கொண்ட "சிலோன் சிவில் சேவை" (Ceylon Civil Service) ஆரம்பிக்கப்பட்டது.
1963ஆம் ஆண்டில் இச்சேவை இலங்கை சிவில் சேவையாக மாற்றம் பெற்று, 1972ஆம் ஆண்டில் இலங்கை குடியரசாக மாற்றம் பெற்றதுடன்
இலங்கை நிருவாக சேவையாக(Sri Lanka Administrative Service) மாற்றம் பெற்றது.
அதிகாரிகள் போட்டிப் பரீட்சையின் மூலம் மட்டுமே தெரிவுசெய்யப்பட்டு இணைத்துக் கொள்ளப்படுவர்.
இந்தியாவிலும் IAS என்ற இந்திய நிருவாக சேவை நடைமுறையில் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் கலெக்டர் முதல் அனைத்து நிருவாகம் சார் பதவிகளும் IAS பரீட்சை மூலம் மட்டுமே நிரப்பப்படும்.

இலங்கையின் முதலாவது சிவில் சேவை அதிகாரியாக 1875ஆம் ஆண்டில் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து சேர் பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் நியமிக்கப்பட்டவர். பிற்காலத்தில் (Ceylon Executive Council) சிலோன் நிறைவேற்று கவுன்சில், சட்டசபை (Legislative Assembly) போன்றவற்றில் அங்கத்தவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் முதலாவது முஸ்லிம் சிவில் சேவை அதிகாரியாக எமது சமூகத்தின் தலைவர்களில் ஒருவராக மதிக்கப்படுபவர் மட்டுமல்ல, அகில இலங்கை YMMA மாநாட்டின் தலைவராக, கொழும்பு சாஹிரா கல்லூரி அதிபராகவும், இரண்டாம் உலகப் போரின் போது கல்முனை அவசரகால கச்சேரியில் அரசாங்க அதிபராக இருந்தவர். வடமாகாணம் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையை பிறப்பிடமாகக் கொண்ட அறிஜர் ஏ.எம். ஏ. அஸீஸ் அவர்கள். 1934 ஆம் ஆண்டில் சிவில் சேவை பரிட்சையில் சித்தி பெற்று சிவில் சேவைியில் இணைந்தவர். அத்துடன் இலங்கை அரசியலில் பிரவேசித்து சட்ட சபை உறுப்பினராகவும் இருந்தவர்.

அன்று தொட்டு இன்றுவரை பல சிவில் சேவை, நிருவாக சேவை அதிகாரிகள் எமது முஸ்லிம் சமூகத்தில் உருவாகியுள்ளனர்.
கடந்த்த காலங்களில் பலர் அமைச்சுக்களின். செயலாளர்களாக இருந்துள்ளனர், குறிப்பாக மர்ஹும்களான எம்.என். ஜுனைட் பொது நிருவாக அமைச்சு, ஏ.எம். ரபீக் பொருளாதார அமைச்சு அத்துடன் அண்மைக் காலங்களில் ஜனாபா மரீனா மொகமட், எம்.ஐ.எம். அமீர், ஏ.மஜீத் போன்றோர் அமைச்சு செயலாளராக இருந்தவர்கள்.

இன்றும் கூட முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் எம்.எம்.நயிமுதீன், நீர் வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ எம். நபில், அத்துடன் வவுனியா அரச அதிபராக இருந்த ஐ .எம்.ஹனீபா மட்டுமல்லாது இன்று பலர் அமைச்சுக்களின் மேலதிக செயலாளராகவும், சிரேஷட உதவிச் செயலாளர், உதவிச் செயலாளர் மற்றும் திணைக்களங்களில் உயர் பதவிகளிலும் உள்ளனர்.

கிழக்கு மாகாண சபையில் அண்மைக் காலங்களில் செயலாளர்களாக யூ. எல். ஏ. அஸீஸ் ஏ.எம்.அன்சார் , எம். வை.சலீம் போன்றோர் கடமையாற்றி ஓய்வு பெற்றனர். எமது தாய் மொழி தமிழ், இந்நாட்டில் 1956பின்னர் கொண்டுவரப்பட்ட சுயபாஷா மொழிக்கொள்கையின் மூலம் ஆங்கிலக் கல்வி மிஷனரி பாடசாலைகள் மாற்றம் பெற்று தாய் மொழிப் பாடசாலைகள் தோற்றம் பெற்றது.

அன்று தொட்டு இன்று வரை ஆங்கிலம் கற்ற மேற்குடியினர் என்ற நிலை மாறி அமைச்சு, திணைக்களங்களின் பதவிகள் அனைத்தும் சாதாரண மக்கள் வசமானது. எந்த ஒரு பதவிக்கும் மொழி சம்பந்தமான நேர்முகப் பரீட்சை நடைபெறுவதில்லை. அப்படி மொழிப் பரீட்சை செய்வதாக இருந்தால் முதலாவது செய்யவேண்டியது எமது சமூகத்தின் தலைவர்கள் என்று முன்வருபவர்களுக்கு என்பது எனது கருத்து.

அது மட்டுமன்றி இவர்கள் சிவில் சேவை சம்பந்தமாக மேலும் படிக்கவேண்டிய நிலையில் உள்ளனர் என்பது தெளிவு. இலங்கையில் சிவில் சேவை அதிகாரிகள் பல நூற்றுக் கணக்கானோர் அரசியலிலும் பிரகாசித்துள்ளனர்.
அதற்குச் சான்றாக அணமையில் மரணித்த முன்னாள் நிதி அமைச்சர், வரலாற்றில் 1977ஆம் ஆண்டின் பின்னர் கூடுதலான வரவு செலவுத் திட்டத்தை சமர்பித்த திரு ரொனி டி மெல் கூட ஒரு சிவில் சேவை அதிகாரியாக இருந்தவர்.

அதுமட்டுமன்றி முன்னாள் நிதி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, முன்னாள் கல்வி அமைச்சர் நிசங்க விஜெயரத்ன, முன்னாள் நிதி அமைச்சர் தொழிலாளர் தலைவர் சி .பி.டி. சில்வா போன்ற பல சிவில் சேவை அதிகாரிகள் வரலாற்றில் பதியப்பட்டுள்ளனர். இலங்கை நிருவாக சேவையில் இணைவதற்கான பரீட்சை தகுதிகள் வரிசையில் ஆகக் கூடிய வயது 27 (சில வேளை மாற்றத்திற்குட்பட்டுள்ளது) உடைய பட்டதாரியான எவரும் பரீட்சைக்கு தோற்ற முடியும். இரண்டு பரீட்சைகள் முதலாவது பரீட்சையில் மூன்று வினாத்தாள் சித்தியடைந்தால் மட்டுமே, இரண்டாவது நான்கு வினாத்தாள் கொண்ட பரீட்சைக்கு அழைக்கப்படுவர். அத்துடன், கட்டமைக்கப்பட்ட (Structural Interwiev) நேர்முகப் பரீட்சை நடைமுறையில் உள்ளது.
 
அந்த வகையில் தமிழ் மொழியில் கற்று நானும் 1995ஆம் ஆண்டு முதல் போட்டிப் பரீட்சை மூலம் இலங்கை நிருவாக சேவையில் இணைந்து 2013ஆம் ஆண்டு முதல் அச்சேவையில் விஷேட தரம் பெற்றவன்.
பல பதவிகளைக் கண்டவன். இலங்கையின் பொதுச்சேவை ஆணைக்குழுவில் அங்கம் வகித்தவன். தற்பொழுது இலங்கையின் தேர்தல் மறுசீரமைப்பு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஒரு ஆணையாளராக கடமை ஆற்றுகின்றேன். இன்று வட கிழக்கு மாகாண சபையில் தமிழ் மொழியில் கருமங்கள் ஆற்றப் படுகின்றன. தமிழ் தெரியாத எத்தனையோ அதிகாரிகள் அங்கு வேலை செய்கின்றனர்.

இவ்வாறான கருத்துக்கள் எமது அரசியலின் இயலாமையை மறைக்கின்ற விடயங்களாகவே காணப்படுகின்றது. இந்த விடயங்களுக்கு பின்னால் தொக்கு நிற்கும் உண்மையான விடயம் மர்ஹும் அஷ்ரப் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் பேரம் பேசும் சக்தி இன்று இல்லாமல் ஆக்கப்பட்டு துண்டாடபட்ட நிலைமையில், எதுவித சக்தியும் ஆற்றலும் ஆற்றவர்களாக எமது தலைவர்கள் காணப்படுவதை மறைப்பதற்கான செயற்பாடாகவே நான் காண்கிறேன்.
 
தயவுசெய்து விதண்டா வாதங்களுக்கு அப்பால் நாங்கள் அறியாத விடயம் கடலளவு என்பதனை உணர்ந்து தெரியாத விடயங்களை தெரிந்து கொள்ள முனைவது சிறந்தது.
A.L.M சலீம் SLAS,SLEAS
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :